மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
விபத்து எப்படி நடந்தது?:
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெபோலி பகுதியில் கோவா-மும்பை நெடுஞ்சாலையில் டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். இதற்கிடையில், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் காயத்துடன் குழந்தை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெபோலி அருகே உள்ள ராய்காட் என்ற இடத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் கார் பெரிதும் சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
விசாரணை:
விபத்தால் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
Also Read: சாலையில் தரதரவென என்னையும் இழுத்திருப்பாங்க... உயிர்தப்பிய மகளிர் ஆணைய தலைவர் பரபரப்பு பேட்டி..
Also Read: டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதிக்கே நடந்த கொடூரம்... குடிபோதையில் ரகளை செய்த கார் ஓட்டுநர்!..