மத்தியப் பிரதேசத்தில் காவல் நிலையத்தில் நாடகக் கலைஞர் உட்பட ஒரு குழுவினர் உள்ளாடைகளைக் கழற்றி நிக்கவைப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலனாதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. புகைப்படத்தில் காணப்பட்ட உள்ளூர் பத்திரிகையாளர், பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு எதிரான போராட்டத்தை செய்திசேகரிக்கும்போது,  தாக்கப்பட்டதாகவும், காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்ததாகவும் கூறினார்.


மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் ஒரு பத்திரிகையாளர் மற்றும் சில ஆர்வலர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் தங்கள் உள்ளாடைகளைக் கழற்றுமாறு சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 


Shocking video: பெற்ற மகனை ரோட்டில் தீ வைத்து எரித்த தந்தை - அதிர்ச்சி வீடியோ...!


கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இந்திராவதி நாடகப் பள்ளியின் இயக்குனர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சித்தியில் உள்ள கோட்வாலி காவல் நிலையம் முன் உள்ளூர் பத்திரிகையாளர் சில ஆர்வலர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் சோனி கூறுகையில், குந்தர், உள்ளூர் பாஜக எம்எல்ஏ கேதர் நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குருதத் ஷரண் சுக்லா ஆகியோருக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான பதிவுளை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் வியாழக்கிழமை வெளிச்சத்திற்கு வந்தவுடன் இரண்டு காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.நாடகக் கலைஞரைக் கைது செய்ததற்கு எதிரான போராட்டத்தில் செய்தி சேகரிக்க அங்கு சென்ற யூடியூப் பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரி, அனுமதியின்றி போராட்டம் நடத்தி அமைதியைக் குலைத்ததற்காக மற்றவர்களுடன் கைது செய்யப்பட்டார்” என்று கூறினார்.


எம்எல்ஏ சுக்லா மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் உள்ளாடையுடன் இருந்த புகைப்படங்கள் பின்னர் சமூக ஊடகங்களில் வைரலானது.


இதற்கிடையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த விஷயத்தை அறிந்து, சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.


Watch Video: பரீட்சை அட்டைக்குள் திரையில் ஓடிய வாட்ஸ் அப்.. நூதனமாக காப்பி அடித்த பள்ளி மாணவன்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண