தமிழ்நாடு:


* மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


* 7.5 இடஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த மூன்றாவது வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


* தமிழ்நாட்டு மீனவர்கள் ஜாமீன் பெற வேண்டுமென்றால் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை 


* சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு -  காவல்நிலையத்தில் இருந்து ரத்தத்துடன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வெளியில் வந்ததாக முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர்  ஜெயசேகர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 


* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


* தமிழ்நாட்டில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


* எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டித்து சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


இந்தியா:


* சபரிமலையில் பிரசாதம் மற்றும் பூஜைக்கான கட்டணங்கள் அதிரடி உயர்வு


* முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு தலைவரை மாற்ற முடியாது என்று கூறி கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது


* ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது


* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. ஒருநாள் முன்னதாகவே அறிவிப்பு


* இந்தியாவில் புதிய வகை  ஒமிக்ரான் தொற்று பாதிப்பு தவறான தகவல் என சுகாதாரத்துறை விளக்கம் 


உலகம்:


* பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனக்கூறிய அந்நாட்டு உச்சநீதிமன்றம் 9ஆம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்ப்பு அளித்தது.


* இலங்கையில் அரிசி, பருப்பு, மருந்துகளின் தட்டுப்பாட்டால் நிலைமை மேலும் மோசமாகிறது. கொழும்புவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நுழைவு வாயில் உடைப்பு


விளையாட்டு:


* ஐபிஎல் தொடரில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி 3வது முறையாக வெற்றி பெற்றது.


* ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண