ஒன்றரை கோடி ரூபாய் பணத்திற்கு கணக்கு காட்டாத மகனை பெற்ற தந்தையே தீ வைத்து எரித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


உயிரிழந்தவர் 25 வயதுடைய அர்பித் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்தது. அர்பித் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பலத்த தீக்காயம் அடைந்த அர்பித் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் சுரேந்திரா  ஃபாப்ரிகேஷன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேற்கு பெங்களூருவில் உள்ள சாமராஜ்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வால்மீகி நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Watch Video : மக்களவையில் பெண் எம்.பி.யுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி...! கலாய்த்து தள்ளிய மீம்ஸ் கிரியேட்டர்ஸ்..!


சம்பவம் நடந்தபோது அர்பித் கடையை நிர்வகித்து வந்தார். அர்பித் தனது தந்தையிடம் கணக்கு விவரங்களைக் கேட்டபோது ரூ. 1.5 கோடி விவரங்களைத் தரத் தவறியதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சுரேந்திரன், அர்பித் மீது தீ வைத்து எரித்தார்.


இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அர்பித்துக்கு 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சுரேந்திராவின் பக்கத்து வீட்டுக்காரர் புகார் அளித்துள்ளார்.


 






 


Watch Video: பரீட்சை அட்டைக்குள் திரையில் ஓடிய வாட்ஸ் அப்.. நூதனமாக காப்பி அடித்த பள்ளி மாணவன்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண