மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார். விழா ஒன்றில் பேசிய அவர் கால்நடைகளுக்கான மேலும் சில திட்டங்களையும் அறிவித்தார்.


மத்தியப்பிரதேசத்தில் கால்நடைகளுக்கு என தனியாக ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மனிதர்களுக்கான 108  ஆம்புலன்ஸ் சேவையைப் போல கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை 109 என உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுளது. சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல சில சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த ஆம்புலன்ஸ் சேவை அதனை சரிசெய்யுமெனவும் மபி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஆம்புலன்ஸ் கால்நடைகளை இடமாற்ற இல்லை. சிகிச்சையே அந்த இடத்துக்கு தேடி வரும் நிலையை உருவாக்க என குறிப்பிட்டார்.


Threat To Actor Surya: சூர்யாவை எட்டி உதைத்தால், ஒரு லட்சம் பரிசு - பாமக மாவட்ட செயலாளரின் வன்முறை பேச்சு




Positive Story | ரிக்‌ஷா ஓட்டுநருக்கு மொத்த சொத்தையும் எழுதிவைத்த பெண்.. ஒடிசாவில் நெகிழவைக்கும் சம்பவம்..


இது மட்டுமின்றி மேலும் சில அறிவிப்புகளையும் சவுகான் குறிப்பிட்டார். இந்திய கால்நடை சங்கம் சார்பாக பெண் கால்நடை மருத்துவர்கள் மாநாடு சக்தி 2021 என்ற தலைப்பில் போபாலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் சவுகான் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மாட்டுச்சாணம்,கோமியத்தில் இருந்து உரம், மருந்து, கிருமி நாசினிகள் மற்றும் சில பொருட்களும் உருவாக்கப்படுகிறது. இதனை இன்னும் தீவிரமாக்க யோசிக்கிறோம்.  அதற்கான இதற்கு தேவையான மாட்டுச்சாணத்தை அரசே கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மாட்டுசாணம் மற்றும் கோமியத்தால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் என தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர், பசுக்கள் மற்றும் காளைகளின் உதவியின்றி நாட்டில் பல வேலைகள் நடக்காது. இதன் தேவை அனைவரும் அறிந்ததுதான்.  அதனால் பசுக்கள் மூலம் வருவாயை எப்படி உயர்த்த வேண்டும் என கால்நடை வல்லுநர்கள் யோசிக்க வேண்டும் என்றார்.


உடற்பயிற்சி ஜிம் நிறுவன மோசடி: ஷில்பா ஷெட்டி கொடுத்த புது விளக்கம்.. புது பரபரப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண