ஒடிசா மாநிலம் கட்டக்கைச் சேர்ந்த 63 வயதுப் பெண் ஒருவர் தனது வீடு, நகைக்கடை ஆகியவற்றை தனது குடும்பத்துக்கு 25 வருடங்களாக உதவியாக இருந்த ரிக்‌ஷா ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்துக்கு எழுதி வைத்துள்ளார். ஒடிசாவின் கட்டக்கை சேர்ந்தவர் 63 வயதான மினாட்டின் பட்நாயக். 70 வயதான இவரது கணவர் புற்றுநோய் தொற்று காரணமாக 2020ம் ஆண்டு இறந்தார். கணவர் இறந்த ஆறே மாதங்களில் அவரது மகளும் மாரடைப்பு காரணமாக உயிரிழிந்தார். இருவரும் உயிரிழந்த நிலையில் குடும்பத்தை இழந்துவிட்ட மினாட்டி உணவு கூட உட்கொள்ளாமல் சோகத்தில் மூழ்கியிருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தில் கடந்த 25 வருடங்களாக குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் அந்தக் குடும்பத்துக்கு பல உதவிகளும் செய்து வந்த பூதா என்பவர் மினாட்டி வீட்டுக்குச் சென்று சோறு சமைத்து அவருக்கு தினமும் உணவு அளித்து பழைய நிலைக்கு மீட்டு வந்தார். 


இதனால் நெகிழ்ந்த மினாட்டி, தனது வீடு, நகைக்கடை உள்ளிட்ட சொத்துகள் அனைத்தையும் பூதாவின் பெயருக்கு எழுதிவைத்துள்ளார். இதுகுறித்துப் பேசிய மினாட்டி, ‘பூதா எங்கள் குடும்பத்துக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். மேலும் அவருடைய குடும்பம் ஒரு சிறிய கூரைக்குக் கீழாவது வாழ வேண்டும் என விரும்பினேன்.அதனால்தான் இந்த சொத்துகளை எழுதி வைத்துவிட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.’


ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆட்சி நடக்கிறது.





அண்மையில் கூட நீட் தேர்வு தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி நவீன் பட்நாயக்கை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் கைப்பட எழுதிய கடிதத்தையும் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் கொண்டு சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.