தமிழ்நாடு : 

  • கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிப்பு
  • கன்னியாகுமரியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட இரட்டை பச்சிளங்குழந்தைகள் உள்பட பலர் பத்திரமாக மீட்பு
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கிராமங்களிலும் வீடுகளை சுற்றித் தேங்கியுள்ள மழைநீர் வடியாத அவலம்
  • கனமழையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • வௌ்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு – வெள்ள சேதாரங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்குகிறார்
  • சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்
  • கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி முதல்வரை நீதிமன்ற காவலில் அடைத்தது போலீஸ்
  • டெல்டா மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நாளை பயணம்
  • தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 8வது சிறப்பு தடுப்பூசி முகாம் – 16.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியா: 

  • நாட்டின் வளர்ச்சியில் தென்னிந்திய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்
  • மாநிலங்களுக்கு இடையேயான 50க்கும் மேற்பட்ட பிரச்சினைகளில் 40 பிரச்சினைகளுக்கு தீர்வு – அமித்ஷா பேச்சு
  • நாட்டின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ்மொழியை அறிவிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • நாட்டின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய மெட்ராஸ் பார் அசோசியேஷன் எதிர்ப்பு
  • அமலாக்கத்துறை, சி.பி.ஐ. இயக்குனர்களின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகாலம் நீட்டிப்பு
  • உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை மண்டல பூஜை நடை இன்று திறப்பு – கனமழை காரணமாக பக்தர்களுக்கான நேரடி பதிவு முறை தற்காலிகமாக ரத்து
  • தமிழக அரசின் காவிரி – குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு

மாவட்ட செய்திகள் :

  • காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் வெள்ளம் – 20 கிராமங்களுக்கான போககுவரத்து துண்டிப்பு
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
  • வேலூரில் வீடு மீது விழுந்த பாறை – தாய் மற்றும் மகள் உயிரிழப்பு
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் தத்தளித்த 7 பேர் மீட்பு

விளையாட்டு :

  • உலககோப்பை டி20 தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண