Watch Video : மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என நினைத்து 2 பேரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் அண்ணன், தங்கையை காதலர்கள் என நினைத்து அப்பகுதி மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கலாவதி மற்றும் ஞானவேல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த பெண்ணிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 6-ஆம் தேதி கணவர் ரமேஷ் வேலைக்கு சென்றிருந்ததார். அப்போது கலாவதியின் அண்ணன் அவரை பார்க்க கந்த்வா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது கலாவதியின் வீட்டிற்கு வந்து அவரிடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காதலர்கள் என நினைத்துக் கொண்டனர்.
இதனை அடுத்து, அவர்களை அழைத்து கிராம மக்கள் சிலர் அதுகுறித்து கேட்டுள்ளனர். கலாவதி தனது சகோதரர்தான் ஞானவேல் என்று கூறியதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்றனர். பின்னர், அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் இருவரையும் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரமாக அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதனை அறிந்த ஒரு சிலர் கலாவதியின் கணவரிடம் இதுபற்றி கூறினர்.
கலாவதியின் கணவர் ரமேஷ் கிராம மக்களில் ஒருவரை தொடர்பு கொண்டு உடன் பிறந்தவர்கள் என்று கூறினார். ஞானவேல் கூறுவதை கிராம மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், அவர்கள் இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ஞானவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். காதலர்கள் என நினைத்து இரண்டு பேரை அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரமாக அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க