தமிழ்நாடு: 



  1. ஆளுநர் செயல்பாடு தொடர்பாக இன்று பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

  2. சென்னை கோவைக்கு இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலில் ஏப்ரல் 16 ம் தேதி வரை டிக்கெட் ரிஷர்வேஷன் நிறைவு

  3. சிஆர்பிஎப் கணினி தேர்வை தமிழில் நடத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்

  4. பிரதமர் மோடியிடம் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

  5. நிலக்கரி சுரங்க விவகாரம் அண்ணாமலை என்ன ஆண்டவனே கேட்டாலும் தப்பு தான்.ஆண்டவனே கேட்டாலும் இத்திட்டத்தை நடத்த முடியாது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.

  6. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக முதலமைச்சர் நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்

  7. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  8. தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் நேசிக்கிறேன் என்று பிரதமர் மோடி விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் பேசினார்.


இந்தியா:



  1. கொரோனா பரவல் எதிரொலி; நாடு முழுவதும் 2 நாள் ஒத்திகை இன்று தொடக்கம்

  2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை ஹரியானா அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

  3. இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  4. கடந்த மூன்று நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று 5,357ஆக குறைந்துள்ளது.

  5. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக இன்று செல்கிறார்.

  6. நிர்வாகத்தை எளிதாக்குவதற்காக கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

  7. ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளராக உள்ள பொம்மன், பெல்லி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார்.

  8. ஹிந்துஸ்தான் என்பது அம்பானிஸ்தான் அதானிஸ்தான் என்று மாறிவிடுமோ? என்ற அச்சம் மக்களிடம் வந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் விமர்சனம் செய்தார்.


உலகம்:



  • நைஜீரியாவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • இஸ்ரேல் நாட்டின் மீது சிரியாவில் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

  • ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களில் கேமராக்களை நிறுவி வருகிறது ஈரான் காவல்துறை.

  • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.


விளையாட்டு:



  • பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி

  • குஜராத் அணிக்கு எதிராக போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணி நம்ப முடியாத வெற்றி பெற உறுதுணையாக இருந்த ரிங்குசிங் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

  • 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஜுன் 12ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • கிளப் அணிகளுக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களில் ஈடுபட்டவர் எனும் புதிய மைல்கல்லை, அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி எட்டியுள்ளார்.

  • கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அணிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு கேப்டனும் இந்தாண்டு எந்த அணியையும் வழிநடத்தவில்லை.