TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Lok Sabha Elections 2024 Phase 1 Polling LIVE Updates: மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன் அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிக்காக வந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்குவதில் தாமதம் மற்றும் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராததால் ஆசிரியர்கள் சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
வேங்கை வயல் கிராம வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருக்கும் 100க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்ற மையங்களில் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மைய்யங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். டோக்கன் வாங்கிய அனைவரும் வாக்களித்த பின்னர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேர்யில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 67.52 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதையடுத்து நாமக்கலில் 67.37ம், ஆரணியில் 67.34ம், கள்ளக்குறிச்சியில் 67,23ம் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் மாலை 5 மணி நில்வரப்படி 73 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தினால் வேங்கை வயல் ஊர் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், வேங்கை வயல் மக்கள் மாலையில் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 5 மணி நிலவரப்படி 66.38% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் காலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். நமது ஏபிபி நாடு தளத்தில் இது தொடர்பாக செய்தி வெளியானதால், மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலில் பங்குபெற வைத்தனர். இதனால் ஒரேநேரத்தில் 1500 பேர் வாக்களிக்க வந்ததால் அதிகாரிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் வாக்காளர்களை வாக்களிக்கவைத்து வருகின்றனர்.
18வது மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 63.20% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக தென்சென்னைத் தொகுதியில் 46.35 % வாக்கு பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள பூத் 292ல் தற்போது வரை 13 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
10 வாக்குசவடி அலுவலர்கள் தங்கள் ஓட்டு பதிவு செய்த நிலையில், பொதுமக்கள் 3 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
அவளூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
ஆனால் எவ்வித சமரசமும் இல்லாததால் அப்பகுதி மக்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர் மற்றும் ஏ டி எஸ் பி குணசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு விவரம் :
சட்டமன்ற தொகுதி வாரியாக மாலை : 05: 00 மணி நிலவரம்
அறந்தாங்கி : 64:20 சதவீதம்.
பரமக்குடி (தனி ) : 63: 83 சதவீதம்.
திருவாடனை : 61: 65 சதவீதம்.
இராமநாதபுரம் : 60: 62 சதவீதம்.
முதுகுளத்தூர் : 61: 43 சதவீதம்.
திருச்சுழி : 71:04 சதவீதம்.
சராசரி : 63:35 சதவீதம்
6 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்கள் திட்டமிட்டே நீக்கப்பட்டு இருக்கும் என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாக்களிப்பதற்காக லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இவர் லண்டனில் மாஸ்டர்ஸ் டேடா அனலட்டிக்ஸ் பயின்று வருகின்றார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள வல்லூரில் 100வயதை எட்டிய முதியவர் ஒருவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் 100வயதினை எட்டிய முதியவர் ஒருவர் கடும் வெயிலிலும் இருசக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து தனது வாக்கினைச் செலுத்தினார்.
18வது மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினைச் செலுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை தி.நகரில் உள்ள ஜி.டி. நாயகம் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தார்.
சென்னை, மத்திய சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்ட்டையில் 5000 அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் 500 அரசு ஊழியர்கள் பெயர் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை என அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய சென்னையின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன், வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழருக்கு வாக்களித்தால் லைட் எரியவில்லை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டுப்போனதால், வாக்களிக்காமல் சென்ற நடிகர் சூரி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால் தனது ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதியம் 3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 58.86 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி தினகரன் சென்னை பெசண்ட் நகரில் தனது வாக்கினைச் செலுத்தினார். தேனி தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.52 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
திமுகவின் கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி, 50.41 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவையில், மதியம் 3 மணி நிலவரப்படி 50.33 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
நடிகர் ஜெய்ம் ரவி தனது வாக்கினைச் செலுத்த சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வந்தார்.
மதியம் 3 மணி நிலவரப்படி குறைந்தபட்சமாக மத்தியச் சென்னையில் வாக்குப்பதிவாகியுள்ளது. இங்கு இதுவரை 41.47 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மதியம் 3 மணி நிலவரப்படி தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தர்மபுரியில் மட்டும் 57.86 சதவீதம் வாக்களித்துள்ளனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மதியம் 3 மணி நிலவரப்படி, இதுவரை 51.41% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் தனது ஜனநாயகக் கடமையைச் செய்ய சென்னையில் உள்ள ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி மையாத்திற்கு வந்தார்.
இயக்குநர் பா. ரஞ்சித் சென்னை ஆவடியை அடுத்துள்ள கலரப்பாக்கம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்துள்ளார்.
மதுரை சுப்ரமணியபுரத்தில் இறந்தவர்களுக்கு பதிலாக உயிரோடு இருப்பவர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், வாக்களிக்க வந்த மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி அங்கிருந்து வாக்களிக்கமுடியாததை எண்ணி, வருத்தத்தோடு வெளியேறினர்.
நடிகர் வடிவேலு தனது ஜன்நாயகக் கடமையாற்ற விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகைதந்துள்ளார். ஏற்கனவே நடிகர்கள் விஜய், விஷால், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் சற்று நேரத்திற்கு முன்னர் வாக்குசெலுத்தினர்.
நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது கணவருடன் வாக்களித்துவிட்டு, INDIA-வுக்கு வாக்களிங்கள் என ட்வீட் பதிவிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளாதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு, நடிகை குஷ்பு, நான் நமது நாட்டுக்காக வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளாதாகவும் அதில் வேறு எந்தவிதமான உள் அர்த்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் சென்னை தி. நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
நடிகர் விஷால் தனது வாக்கினை அண்ணாநகரில் உள்ளா வள்ளியம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட பொட்டலூரணி பகுதியில் கள்ள ஓட்டு போடவந்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளயத்தில் பி.என்.டி வாக்குச்சாவடியில் கடந்த முறை வாக்களித்த 830 வாக்காளர்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததைக் கண்டித்து பாஜகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொட்டலூரணி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காரை விட்டு இறங்கவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்த கிராம மக்கள்.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள். இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சு வார்த்தை வேண்டாம். நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம். பின்வாங்க மாட்டோம் எனக் கூறி விரட்டி அடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி பொட்டாலூரணி பகுதியில் மக்கள் தேர்தலை புறக்கணித்து வரும் நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள முத்தையா முதலி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் வாக்களித்தனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 1 மணி நிலவரப்படி 41.74 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பகல் 1 மணி நிலவரப்படி ஆலங்குளம்-43.45% நெல்லை- 36.87% அம்பாசமுத்திரம்- 41.03% பாளையங்கோட்டை- 34.32% நாங்குநேரி-37.79% ராதாபுரம்-36.49% என சராசரியாக மொத்தம் 38.23% வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 1 மணி நிலவரம் படி 39.92% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
TN Lok Sabha Election LIVE : பிற்பகல் 1 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு
பிற்பகல் 1 மணி நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக தேர்தல் வலைதளத்தில் தகவல் பதிவாகியுள்ளது
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு விவரம் : சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் : 01: 00 மணி நிலவரம் :
அறந்தாங்கி : 42:74 சதவீதம்.
பரமக்குடி (தனி ) : 42:14 சதவீதம்.
திருவாடனை : 40:50 சதவீதம்.
இராமநாதபுரம் : 36:39, சதவீதம்.
முதுகுளத்தூர் : 39:90 சதவீதம்.
திருச்சுழி : 46:25 சதவீதம்.
சராசரி : 40:90 சதவீதம்
தற்போது வரை விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 34.39% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறையில் வாக்குகள் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பிரபல ஐந்து ரூபாய் டாக்டர் ராமமூர்த்தி. வாக்களிக்க தனது தள்ளாடும் வயதில் சென்னையில் இருந்து வந்த நிலையில் விரக்தியுடன் திரும்பிச் சென்ற அவலம்.
JP Nadda : இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.. கேரளா, பாஜக வேட்பாளர் சுரேந்திரனை ஆதரித்து பேசிய ஜே.பி நட்டா
காலை 11 மணி நிலவரப்படி விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 17.01% வாக்குகள் பதிவாகியுள்ளது.
நடிகர்கள் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். நடிகர் சூர்யா வாக்களித்தபின் பேசுகையில், "அனைவரும் கலந்து கொண்டு தங்கள் வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் வேட்பாளர்களை வந்து வாக்களிப்பதற்கு முன்பு நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
Ramya Pandian Vote : நாட்டினை விமர்சனம் செய்யும் நாம் வாக்களிக்க வருவதில்லை. கட்டாயம் அனைவரும் வரவேண்டும் என்றார் ரம்யா பாண்டியன். பல்லாவரம் அடுத்த பம்மலில் நடிகை ரம்யா பாண்டியன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை அனைவரும் கட்டாயம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள். 100 சதவீத அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். நமது நாட்டினை பற்றி ரொம்ப குறை சொல்லுகிறோம், விமர்சனம் செய்கின்றோம் ஆனால் நாட்டினை மாற்றும் சக்தியாக தேர்தலில் வாக்களிக்க மறந்து விடுகின்றோம் என்று கூறினார்
நீலாங்கரையில் புனித தோமையார்மலை ஊ.ஓ பள்ளியில் வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
நீலாங்கரையில் புனித தோமையார்மலை ஊ.ஓ பள்ளி வாக்குச்சாவடிக்கு விஜய் வருகை தந்துள்ளார்.
TN Lok sabha Election LIVE : மணிப்பூரில் ஒரு வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மக்களவை தேர்தலுக்கு வாக்கு செலுத்துவதற்க்காக நீலாங்கரை வாக்குச்சாவடியை நோக்கி புறப்பட்டார் நடிகர் விஜய்.
மக்களவை தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களின் காலை 11 மணி நிலவரம்:
- ஜம்மு & காஷ்மீர் - 22.60%
- மத்தியப் பிரதேசம் - 30.46%
- மகாராஷ்டிரா - 19.17%
- மணிப்பூர் - 28.19%
- அசாம் - 27.22%
- அருணாச்சலப் பிரதேசம் - 18.26%
- சத்தீஸ்கர் - 28.12%
- பீகார் - 20.42%
தூத்துக்குடி: செக்காரகுடி அருகில் உள்ள பொட்டலூரணியில் 931 ஓட்டுகள் உள்ள நிலையில் இதுவரை வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும் 15 ஒட்டுகளை பதிவு செய்துள்ளனர். தனியார் மீன் ஆலையால் சுற்றுபுற சூழல் கெடுவதாகவும் ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என ஊர் மக்கள் குற்றசாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி உள்ளடக்கிய போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த 750 வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மையம் நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பக்கத்து ஊராட்சியில் அமைந்ததால் கிழக்குமேடு கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் ஏஜென்ட்கள் உட்பட அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து தேர்தலை புறக்கணிப்பதால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது... தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பமாகி மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகியும் 66/208 பூத்தில் ஒரே ஒரு வாக்கு கூட பதிவாகாததால் பரபரப்பு.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 22.77% வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 11 மணி நிலவரம் படி 24.89% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யாததை கண்டித்து இரண்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தொகுதியில் 11 மணி நேர நிலவரப்படி 23.30 சதவீத வாக்குகளும், பொள்ளாச்சி தொகுதியில் 22.36 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு விவரம் : சட்டமன்ற தொகுதி வாரியாக காலை : 11: 00 மணி நிலவரம்
அறந்தாங்கி : 26:46 சதவீதம்.
பரமக்குடி (தனி ) : 25: 92 சதவீதம்.
திருவாடனை : 25:52 சதவீதம்.
இராமநாதபுரம் : 24:61 சதவீதம்.
முதுகுளத்தூர் : 25:39 சதவீதம்.
திருச்சுழி : 28: 62 சதவீதம்.
சராசரி : 25:92 சதவீதம்
TN Lok sabha Election LIVE : 11 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 23.72% பதிவான வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி, 23.72% வாக்குகள் பதிவாகியுள்ளது
பழனி அருகே ஆயக்குடி பகுதியில் இளைஞரின் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக அதிகாரிகள் கூறியதால் வாக்களிக்க முடியாமல் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
TN Lok sabha Election LIVE : சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழப்பு. வாக்களிக்கச் சென்ற சின்னப்பொண்ணு என்ற மூதாட்டியும், பழனிசாமி என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்
சேலம் கெங்கவல்லி அருகே செந்தூரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு.
நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், கார்த்திக், பிரபு, கவுதம் கார்த்திக். தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் மோகன், சரத்குமார், யோகி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்கள் வாக்கினை செலுத்தினார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ராமதாஸ், பிரேமலதா, அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா தடையை வருவாய் துறை நிறுத்தி வைப்பை நீக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்றத் தேர்தல் வரை புறக்கணித்துள்ளனர்.
சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுணக்கமாக நடைபெறுகிறது. மத்திய சென்னை - 8.59%, வடசென்னை -9.73% தென் சென்னை - 10.08 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
TN Lok Sabha Election Actress Trisha Vote : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகை த்ரிஷா வாக்களித்தார்
Minister Udhayanidhi Stalin Vote : வாக்களித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்திருக்கும் SIET கல்லூரியில், மனைவி கிருத்திகாவுடன் வரிசையில் நின்று காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றினார் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாக்களித்தார்.
ஒரு வாக்கு கூட பதிவாகாத மூன்று கிராமங்கள்..
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம்,விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விருத்தகிரிக்குப்பம், நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மும்முடிச்சோழகன் கிராமத்தில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
TN Vote Percentage Virudhunagar : விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி - வாக்குபதிவு நிலவரம்
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி - வாக்குப்பதிவு நிலவரம்
காலை: 09:00 மணி
விருதுநகர் - 10.08%
திருப்பரங்குன்றம் - 11.02%
திருமங்கலம்- 11.41%
சாத்தூர் - 11.36%
சிவகாசி - 10.37%
அருப்புக்கோட்டை -
10.24%
Tamilnadu Arani Vote Percentage : ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையில் 6.84 சதவீதம் வாக்கு நடந்துள்ளது
TN Vote Percentage Thirunelveli : நெல்லை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்: 9.62% வாக்குகள் பதிவானது
காலை 9 மணி நிலவரப்படி, நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 9.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நீர், மோர் பந்தல்கள் வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
TN Vote Percentage Theni : 33 தேனி பாராளுமன்ற தொகுதியில் 9 மணி நிலவரம் படி 8.59% வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளது.
33 தேனி பாராளுமன்ற தொகுதியில் 9 மணி நிலவரம் படி 8.59% வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளது.
1. சோழவந்தான் 11.23%
2. உசிலம்பட்டி 5%
3. ஆண்டிபட்டி 8%
4. பெரியகுளம் 9.8%
5. போடிநாயக்கனூர்16%
6. கம்பம் 2.19%
தமிழகத்தில் 39 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், பல வாக்குச்சாவடிகளில் வெப்பத்தை தணிக்கை நீர், மோர் பந்தல்கள் வைக்கப்பட்டுள்ளன
Tamil Nadu Lok Sabha Election 2024 Voting LIVE : கோவையில் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். நேர்மையான திறமையான ஆட்சியை மோடி தந்துள்ளார். மக்களின் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாஜக குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும். கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும். அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி. இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.
Lok sabha Election LIVE : தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Sadhguru Vote : ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ”உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று. நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று.
ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பராபுரம் இந்து துவக்க பள்ளியில் அதிமுக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் மக்களுடன் மக்களாக நின்று வாக்களித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் மனைவி துர்காவும் வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இருவரும் வாக்களிக்கவுள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாக்கை செலுத்த தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரிக்கு தன்னுடைய மனைவி துர்காவுடன் வந்துள்ளார்.
ராமநாதபுரம் எம் எஸ் கே நகராட்சி தொடக்கப்பள்ளியில் எந்திர கோளாறு காரணமாக, வாக்குச்சாவடி எண் 118 இல் வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்க்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் வாக்குசாவடி எண்.326 இல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் க.செல்வம் குடும்பத்தினரோடு வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி இளையராஜா மக்களவை தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய வாக்கை தவறாமல் செலுத்தி வரும் இளையராஜா, இந்த தேர்தலிலும் காலையிலேயே வரிசையில் மக்களோடு மக்களாக வந்து நின்று வாக்களித்தார்
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு போட வேண்டும். நாம வந்து ஓட்டு போட்டோம் என சொல்வதில் மரியாதை, கௌரவம் இருக்கு. ஓட்டு போடலைன்னு சொல்றதுல்ல மரியாதையும் இல்ல, கௌரவமும் இல்ல. தயவு செஞ்சி எல்லாரும் ஓட்டு போடுங்க.” என தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். மாம்பழம் 10 இடங்களிலும் வெற்றி பெறப்போகிறது என பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு தமிழகத்தில் இன்று நடைப்பெறும் நிலையில், வேலூர் மக்களவைத்தொகுதியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி
தனது சொந்த கிராமமான வேலூர் மக்களவைத்தொகுதிக்குட்ப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி எண் 213ல் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கினை செலுத்தினார்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்களித்தார்.
இந்திய ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேனி அருகே நாராயண தேவன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.
தமிழக பாஜக தலைவரும், கோயம்புத்தூர் தொகுதியின் அக்கட்சியின் வேட்பாளருமான கே.அண்ணாமலை தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு தாமதமாகி வருகிறது.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்களிப்பது உரிமையின் கடமை. கூட்டணி கட்சி வேட்பாளர் சிவக்கொழுந்து மக்கள் ஆதரவுடன் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். பணம் கொடுத்து வாக்கு வாங்குவது ஜனநாயகத்தை மீறிய செயல்” என தெரிவித்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி, தனது சொந்த ஊரான சென்னம்பட்டி வாக்குச் சாவடியில், குடும்பத்துடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
சேலம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார்.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோர் வீட்டிலிருந்து நடந்து வந்து வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இது தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.
கோவை கணபதி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் வாக்குச்சாவடியில், வாக்கு சாவடி எண் 285 ல் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு. 45 நிமிடங்கள் தாண்டியும் இன்னும் வாக்குப்பதிவு துவங்கவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள வாக்குசாவடி எண் 101 ல் இரண்டு மையங்கள் உள்ளன. இதில் ஒரு மையத்தில் 7 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் தற்போது வரை வாக்குபதிவு நடைபெறவில்லை.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முத்தரசன் வாக்களித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட ஆயக்கொளத்தூர் 82ஆவது வாக்கு சாவடி மையத்தில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதானதால் தற்காலிகமாக வாக்களிப்பது நிறுத்தும் பழுதான இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கினை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குப் பட்ட பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வாக்கினை செலுத்தினார்.
நெல்லை தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 285 ல் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காலையில் வாக்களிக்க வந்தவர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரத்தில் கோளாறு. நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கவுள்ள மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.
திருவான்மியூரில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சரத்குமார், ராதிகா வருகை புரிந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி சிறுமலர் பிரைமரி பள்ளியில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் துரை வைகோ வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு, காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், "லோக்சபா தேர்தலில் என்னால் வாக்களிக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தமிழகத்தைப் பொருத்தவரை, இந்தியக் குழு வாக்களிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுங்கள்... இது முதல் கட்ட தேர்தல், ஏழு கட்ட தேர்தல்கள்... இன்று தமிழகம் முழுவதும் வாக்குகள் பதிவாகி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.
தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி, “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தநிலையில், மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், நரிமேடு ஆரம்பப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தநிலையில், கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார்.
திண்டிவனத்திலுள்ள மரகதாம்பிகை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி ராமதாஸ் வாக்கு செலுத்தினார். இதையடுத்து, செளமியா அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதாகவும், தர்மபுரியில் மகளிர் தனக்கு அதிக வரவேற்பு அளிப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என தெரிவித்தார்
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கணபதி பகுதியில் உள்ள எஸ்ஜிஎஸ் பள்ளியில் வாக்களித்தார்.
காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்ஓட்டிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள பூத் எண் 19 வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட உள்ளது.
Kanchipuram Lok Sabha Election LIVE : காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் ஓட்டிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள பூத் எண் 19 வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் திருவான்மியூரில் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித் குமார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை சாதனை எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது மற்றும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!” என பதிவிட்டிருந்தார்.
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்க உள்ளார்.
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வள்ளியம்மாள் இன்று மூதாட்டி காலை முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளார்.
ஸ்ரீபெரும்புத்தூர் திமுக மக்களவை தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலு 7 மணிக்கு கோடம்பாக்கம் பாத்திமா பள்ளியில் வாக்களிக்கிறார்.
முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் (19.04.24) காலை 7 மணியளவில் சென்னை மந்தவெளிப்பாக்கம் 4 மற்றும் 5 வது குறுக்குத்தெருவில் உள்ள ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்.
இந்த லிங்கை https://electoralsearch.eci.gov.in பயன்படுத்தி உங்களின் வாக்குச்சாவடி விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக அஜித்குமார் வருகை புரிந்துள்ளார். காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வருகை தந்து காத்திருக்கிறார் அஜித் குமார்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
வாக்காளர் அடையாள அட்டை உள்பட 12 வகை ஆவணங்களை காண்பித்து தேர்தல் வாக்களிக்கலாம். ஆதார் கார்டு, புகைப்படத்துடன் உள்ள வங்கி (அ) அஞ்சலக கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் அடையாள ஆவணமாகும்.
100 நாள் வேலை பணி அட்டை, தொழிலாளர் அமைச்சகம் அளித்த காப்பீடு அட்டை, பான் கார்டு, புகைப்படத்துடன் ஓய்வூதிய ஆவணம், பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாவல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் பட்டியலில் வாக்காளர் தமது பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் https;//electoraisearch.eci.gov.in இணையதளத்தில் பெயர் இருப்பதை உறுதி செய்யலாம். அடையாள அட்டை உள்பட ஆவணங்கள் இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் வாக்களிக்கலாம்.
தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு பேரவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. விஜயதரணி பாஜகவில் இணைந்ததை அடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் விளவங்கோடு காலியானது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காளை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு 68, 321 வாக்குச்சாவடிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் முன்ன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டது.
Background
Lok Sabha Elections 2024 Phase 1 Polling LIVE
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதேசமயம் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 30 ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 40 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர்.
ஏப்ரல் 17 ஆம் தேதி வாக்கு சேகரிப்பு பரப்புரை ஓய்ந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வெளியூரில் இருக்கும் மக்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ நேற்று தெரிவித்திருந்தார்.
வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள்,முதியவர்கள்,கர்ப்பிணிகள் என அனைவருக்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -