மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது.


சென்னை வரும் கார்கே:


இந்த நிலையில் வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் அவர் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார். அன்றைய தினம் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை தி.மு.க. வழங்கியது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகளை வழங்கியது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வரை வழங்க தி.மு.க. தயக்கம் காட்டி வருகிறது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. இந்த முறை தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ளது.


தொகுதிப் பங்கீடு:


மேலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தாலும், இந்த முறை மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பும் காங்கிரஸ் கட்சிக்கு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு 10 தொகுதிகள் வரை தி.மு.க. தயங்கி வருகிறது. காங்கிரஸ் தரப்பினர் 13 தொகுதிகள் வரை கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணியில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் மட்டுமின்றி இன்னும் சில கட்சிகளும் கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டி வருதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என்பதால் காங்கிரசுக்கு குறைவான இடங்களே தர தி.மு.க. முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 13ம் தேதி சென்னை வருகிறார். அப்போது, அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறையை காட்டிலும் குறைவான தொகுதிகளே வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Actor Vijay: விஜயின் அடுத்த மூவ்! இன்று வெளியாகிறதா கட்சியின் பெயர்? அரசியலில் பரபரப்பு


மேலும் படிக்க: 400 இடங்களை வெல்வதற்கு பாஜகவின் மாஸ்டர் ப்ளான் - ஏபிபி நாடு எக்ஸ்குளுசீவ் ரிப்போர்ட்!