இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அடையாள அட்டை உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இ சேவை மையங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது.


ஆதார் அடையாள அட்டை:


இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தை சிறு குழந்தை ஒன்று ஆதார் அடையாள அட்டைக்காக எடுக்கப்பட்ட போட்டோவின்போது செய்த சேட்டைகள் கலக்கி வருகிறது. பொதுவாக புகைப்படம் எடுக்கும்போது ஏதாவது போஸ் கொடுப்பது வழக்கம். சமீபகாலமாக குழந்தைகளுக்கும் போஸ் கொடுக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். இதனால், அவர்களும் மிக அழகாக போஸ் கொடுக்கின்றனர்.






மனதை பறித்த சுட்டிக்குழந்தை:


இந்த நிலையில், குன்குன் என்ற பெண் குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவதற்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆதார் அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுப்பது வழக்கம். அவ்வாறு புகைப்படம் எடுப்பதற்காக அந்த குழந்தையை கணினியின் முன் உள்ள நாற்காலியில் நிற்க வைத்தனர்.


ஆனால், அந்த குழந்தை விதவிதமான போஸ்களை கொடுத்து ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுப்பவர் உள்பட அங்கிருந்த அனைவரின் மனதையும் கவர்ந்தது. இதை அங்கிருந்த அவரது பெற்றோர்கள் வீடியோவாக எடுத்தனர்.


இந்த வீடியோவை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. குழந்தையின் வித்தியாசமான ரியாக்‌ஷனும், கண்ணடிக்கும் அழகும், கன்னத்தில் கை வைத்து தந்த போசும் பார்ப்பவர்களின் மனதை பறித்தது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இன்னும் சிலர் இந்த குழந்தை பார்லே ஜி பிஸ்கட் விளம்பரத்தில் வரும் குழந்தையைப் போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: ஸ்கூலில் இப்படியா! நாற்காலியுடன் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி முதல்வர் - நடந்தது என்ன?


மேலும் படிக்க: திருமாவளவன் தேர்தலுக்காக எதை எதையோ பேசி வருகிறார் - பாமக தலைவர் அன்புமணி