விழுப்புரம்  : திருமாவளவன் தேர்தலுக்காக எதை எதையோ பேசி வருகிறார், வேறு வழி இல்லாமல் புழுக்கத்தோடு அந்த கூட்டணியில் பேசி வருகிறார் திருமாவளவன்  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வி.சாத்தனூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றினார்.

 

அப்போது அவர் பேசுகையில்... தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் முக்கியமான தேர்தல். திமுகவைப் பொறுத்தவரை இது மற்றொரு தேர்தல் அவ்வளவு தான். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திமுக நினைக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5%, இல்லை 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவார் ஸ்டாலின். திமுக வெற்றி பெற்றால் ஒதுக்கீட்டை மறந்து விடுவார்கள்.  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என சட்டமன்றத்திலேயே முதல் ஸ்டாலின் தெரிவித்துவிட்டார்.  திமுக, அதிமுக, தேமுதிக என எந்த கட்சியில் இருந்தாலும் இந்த முறை மாம்பழத்துக்கு வாக்களியுங்கள். பாமக நடத்திய பொது கூட்டத்தை பார்த்து திமுக பயந்து போயுள்ளது.

 

34 அமைச்சர்களில், 25 அமைச்சர்கள் விக்கிரவாண்டியில் தொகுதியில் உள்ளனர. அந்த அளவுக்கு திமுக பயத்தில் உள்ளது. திமுகவின் நூறு சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ளனர். கள்ளச்சாராயம், கஞ்சா ஆகியவை ஆளுங்கட்சிக்கு தெரியாமல் விற்பனை செய்ய முடியாது. என பேசினார்:

 தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி:


தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்தில் குறைந்தது தினம் இரண்டு கொலைகள் நடைபெற்றுகிறது. கடந்த மாதம் தென் மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டார். மூன்று நாட்களுக்கு முன்பு அதிமுக முக்கிய நிர்வாகி சேலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் 65 பேர் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.


வேறு வழி இல்லாமல் புழுக்கத்தோடு திருமாவளவன் அந்த கூட்டணியில் பேசி வருகிறார்


திருமாவளவன் தேர்தலுக்காக எதை எதையோ பேசி வருகிறார். திருமாவளவனை திமுக எப்படி நடத்தியது என்பதை கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பொது தொகுதி கூட கொடுக்கப்படவில்லை. வேறு வழி இல்லாமல் புழுக்கத்தோடு அந்த கூட்டணியில் பேசி வருகிறார். 

 


உளவுத்துறை அதிகாரிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தங்கி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்


இவர்களை திமுக அரசு கொலை செய்துள்ளதாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது இதற்கு முக்கிய காரணம் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தான். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் ஆறாக ஓடுகிறது. முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான உளவுத்துறை அதிகாரிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தங்கி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார் என்றால் தமிழ்நாட்டில் சட்டம் முழுமையாக கேட்டு விட்டது. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும். 

அமைச்சர் ஐ.பெரியசாமி  கற்பனையில் பேசுகிறார்


தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அன்புமணி: அவர் சொல்வது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. தினமும் கொலை, கொள்ளை நடைபெற்று வரும் நிலையில் அவர் கற்பனையில் பேசுகிறார்.

 

ஆம்ஸ்ட்ராங்  கொலை செய்தவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்பதை கண்டறிந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. கூலிப்படை கலாச்சாரத்தை அழிக்க வேன்டும். 

 

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, காவல்துறைக்கு பொறுப்பாக உள்ள முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் காவல்துறை பொறுப்பை வேறு யாருக்கு இடம் கொடுக்க வேண்டும்.