உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது காசியாபாத் நகரம். இங்குள்ள கவிநகர் பகுதியில் காசியாபாத் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. காசியாபாத் நீதிமன்றம் எப்போதும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இயங்கக்கூடிய நீதிமன்றம் ஆகும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான போலீசாரும், வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.


நீதிமன்றத்தில் புகுந்த சிறுத்தை:


இந்த நிலையில், காசியாபாத் நீதிமன்றம் இன்றும் எப்போதும் போல பரபரப்பாக காணப்பட்ட நிலையில், இந்த நிலையில் வழக்கம்போல இன்றும் காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகம் இயங்கியது. அப்போது, திடீரென எங்கிருந்தோ வந்த சிறுத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த சிலரை கடித்து குதறியது.






சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளான சிலர் அலறியடித்து ரத்த வெள்ளத்தில் தப்பி ஓடினர். திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து ரத்த வெள்ளத்துடன் சிலர் அலறியடித்து ஓடிவந்ததை கண்ட வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், காயம்பட்டவர்கள் தாங்கள் சிறுத்தையால் தாக்கப்பட்டதாக கூறியதையடுத்து, நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்த தகவலறிந்த அனைவரும் பீதியில் உறைந்தனர்.


தாக்கிய வழக்கறிஞர்கள்:


மேலும், நீதிமன்றத்தில் அந்தந்த அறையில் இருந்தவர்கள் தங்களது அறையை பூட்டி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். அதற்கு முன்பாக நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த வழக்கறிஞர்கள் மூன்று பேர் கையில் கம்பு, மற்றும் கட்டைகளுடன் சென்று தாக்கியுள்ளனர்.






ஆனாலும், அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுத்தையை நீண்ட நேரம் கழித்து தீயணைப்புத்துறையினர் பிடித்தனர். பின்னர், மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து சிறுத்தை பொதுமக்களை சரமாரியாக தாக்கியது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்பட்டது. 


மேலும் படிக்க: Cow Hug Day : '’காதலர் தினத்தன்று பசுவை கட்டியணைத்து கொண்டாடவும்” புதிய ஐடியாவுடன் வந்த விலங்குகள் நல வாரியம்..!


மேலும் படிக்க: நான் தேச விரோதியா? நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே - நடந்தது என்ன?