அமேசானில் இருந்து ரூ. 19, 000 மதிப்புள்ள சோனி XB910N வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை ஆர்டர் செய்த என்ற யாஷ் ஓஜா நபர் கோல்கேட் ரூத்பேஸ்டை பெற்றதால் அதிர்ச்சியடைத்துள்ளார்.


நம்மில் பலர் இணையத்தில் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் மூலம் நாம் வீட்டை விட்டு வெளியேறாமல் நமக்கு தேவையானதை ஆர்டர் செய்து, ஆஃபர் என்ற பெயரில் மலிவாக பெற்றுகொள்கிறோம். மேலும், ஆன்லைன் ஹாப்பிங் பண்ணும் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துகிறது. 


எந்த அளவிற்கு ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு உதவியானதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில குறைபாடுகளை நமக்கு தருகிறது. ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஆர்டர்கள் தாமதாகவும், சிலது தவறாக அல்லது உடைந்து வருவதாக பலரும் கூறிவருகின்றன. இப்படியான நிகழ்வின்போது பயனர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது விரக்தியை வெளிப்படுத்துவர். 


அந்த வகையில் சமீபத்தில், அமேசானில் இருந்து ரூ. 19, 000 மதிப்புள்ள சோனி XB910N வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை ஆர்டர் செய்த என்ற யாஷ் ஓஜா நபர் கோல்கேட் ரூத்பேஸ்டை பெற்றதால் அதிர்ச்சியடைத்துள்ளார். மேலும், அமேசானில் இருந்து பிரித்த வீடியோவை நல்லவேளையாக அவர் எடுத்துள்ளார். அந்த வீடியோவை அமெசானில் பகிர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “நான் Sony xb910n ஐ ஆர்டர் செய்தேன். அதில் ஹெட்வோனுக்கு பதிலாக Colgate lmao கிடைத்தது” என குறிப்பிட்டிருந்தார். 






ஓஜாவின் புகாருக்கு உடனடியாக பதிலளித்த அமேசான், “உங்கள் ஆர்டரின் தவறாக அனுப்பப்பட்ட பொருளுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். நேரடியாக உங்களுக்கு மெசேஜ் செய்து தகவலை பெற்றுகொள்கிறோம். ” என தெரிவித்திருந்தது. 


ஆன்லைன் ஷாப்பிங்கிலிருந்து வாடிக்கையாளர்கள் தவறாக பொருட்களை பெறுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, அமேசானில் இருந்து ₹90,000 மதிப்புள்ள கேமரா லென்ஸை ஆர்டர் செய்த ஒரு நபர் வேறு பொருள் ஒன்றை பெற்றார். இதுகுறித்து அப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவர், ”அமேசானில் இருந்து 90K INR கேமரா லென்ஸை ஆர்டர் செய்த எனக்கு, லென்ஸுக்குப் பதிலாக குயினோவா விதைகள் அடங்கிய லென்ஸ் பெட்டிக்குள் வைத்து அனுப்பியுள்ளனர்.” என்று குறிப்பிட்டு இருந்தனர்.