கொல்கத்தாவின் சாலையில் சென்றுகொண்டிருந்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


கொல்கத்தாவின் டோரினா கிராசிங்கில் டயர் வெடித்ததால் மினி பேருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பயணிகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் 50 பேருடன் பஸ் பார்க் சர்க்கஸில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 


டயர் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பேருந்து கவிழ்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க: TASMAC Bar: அரசு டாஸ்மாக் கடைகளில் பார்கள் எதற்கு? - இழுத்து மூடுங்கள்! - கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்


போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் உள்ளூர்வாசிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தற்போது, மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த வீடியோ பார்ப்போரை பதறவைக்கிறது. 






இந்த விபத்துக்கு பிறகு மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், தகுதியற்ற அனைத்து பேருந்துகளையும் பறிமுதல் செய்யுமாறு அந்தத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.


மேற்கு வங்க அரசு சமீபத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை அதிகரித்துள்ளது. அதிக வேகத்திற்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரையும், சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.100 முதல் ரூ.1,000 வரையும், ரூ.400 (சிறிய கார்கள்) மற்றும் ரூ.1,000 (பெரிய கார்கள்) மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் ரூ. 5,000 வரையும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






மேலும் படிக்க: Urban Local Body Election: பட்டாசு வெடித்து குப்பையாக்கி... அதை தானே பெருக்கி பேமஸ் ஆக நினைத்த அதிமுக வேட்பாளர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண