யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்து பலரும் பலவிதமான விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் செய்துள்ள காரீயம் வேகமாக வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் மணிப்பால் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் பொறியியல் பயின்று வருகிறார். அவர் தன்னுடைய விடுதிக்கு செல்லும் போது ஒரு ட்ராலி பேக் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த ட்ராலி பேக்கில் என்ன உள்ளது என்பது தொடர்பாக விடுதியின் காப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் ஆன்லைனில் வாங்கிய பொருட்களை அந்தப் பேக்கில் எடுத்து செல்வதாக அந்த நபர் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த பேக்கை திறந்து காட்ட பாதுகாவலர் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர் ட்ராலி பேக்கை திறந்து காட்டியுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த ட்ராலி பேக்கிலிருந்து இளம் பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் அந்தப் பெண் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்துள்ளார்.
அதன்படி அந்தப் பெண் அதே கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கல்லூரி நிர்வாகம் சில நாட்கள் கல்லூரியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ என்று 2019ஆம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முடியவே முடியாது.. மாநிலங்களவையை அலறவிட்ட தமிழக எம்.பிக்கள்.. அடக்கிய வெங்கையா நாயுடு..