கொல்கத்தாவில் கடந்த 9ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தியும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொல்கத்தாவில் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.



பெண் மருத்துவர் கொலை:

இந்த நிலையில் நேற்று மாணவர் அமைப்பினர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அந்த மாநில தலைமை செயலகத்தை நோக்கி பேரணி சென்றனர். இந்த பேரணியின் போது ஏற்பட்ட போலீசாருக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.


இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க.தான் காரணம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய அமைதி பேரணியில் போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதற்கும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும் தாக்குதல் நடத்தியதை கண்டித்து 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மேற்கு வங்காளத்தில் பந்த்:






இதன் காரணமாக மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை கைது செய்தனர். பாஜக-வின் அழைப்பை ஏற்று அங்கு பல இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. பாஜக -வின் இந்த பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுத்தள்ளது.


நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற 4 பேரை காணவில்லை என்றும், அவர்களை போலீஸார் பிடித்து வைத்துள்ளதாகவும் மாணவ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  கொல்கத்தாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், தலைமை செயலகம் மற்றும் மம்தாவின் வீட்டிற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Annamalai London Visit : “பரபரப்பான அரசியல் சூழலில் லண்டன் புறப்பட்டு சென்றார் அண்ணாமலை” எதற்கு தெரியுமா..?