கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இருக்கும் கனியம்பேட்டா பகுதியை சேர்ந்தவர் மிதுன். இவர் அமேசானில் பாஸ்போர்ட் கவரை அக்டோபர் 30ஆம் தேதி ஆர்டர் செய்தார். அதன்படி அவருக்கு நவம்பர் ஒன்றாம் தேதி அமேசானிலிருந்து பார்சல் வந்திருக்கிறது.


அதனை பிரித்து பார்த்தபோது கவருக்கு பதில் பாஸ்போர்ட்டே இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடை ந்த அவர் அமேசான் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னார். அப்போது பேசிய கஸ்டமர் கேர் அலுவலர்,  “இது மீண்டும் நடக்காது, அடுத்த முறை மிகவும் கவனமாக இருக்குமாறு விற்பனையாளருக்கு அறிவுறுத்துவோம்” என்றார்.


மேலும் வாசிக்க: Watch Video | கண்ணுக்கு விருந்து.. ஆற்றங்கரையில் 9 லட்சம் விளக்குகள்.. கின்னஸில் நுழையும் தீப உற்சவம்.!


இருப்பினும், அட்டையுடன் வந்த பாஸ்போர்ட்டை என்ன செய்வது என்று அவர் கூறவில்லை. இதனால் மிதுன், பாஸ்போர்ட்டுக்குரிய நபரை தேடும் முயற்சியில் அவரே இறங்கினார்.


முயற்சியின் பலனாக அந்தப் பாஸ்போர்ட், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சலிஹ் என்பவருடயது என தெரியவந்தது. அதனையடுத்து பாஸ்போர்ட் சலிஹிடம் ஒப்படைக்கப்பட்டது.




இதுகுறித்து பேசிய மிதுன், “ இந்த பாஸ்போர்ட் கவரை முதலில் சாலிஹ் ஆர்டர் செய்திருக்கலாம். பாஸ்போர்ட்டுக்கு சரியாக இருக்கிறதா என தனது பாஸ்போர்ட்டை வைத்து அவர் பரிசோதித்திருக்கிறார். அந்த கவர் தனக்கு பிடிக்காமல் போனதால் கவரை மீண்டும் கொடுக்கும்போது உள்ளே வைத்த பாஸ்போர்ட்டை எடுக்காமல் கொடுத்திருக்கலாம். அந்த கவருக்கான மற்றொரு ஆர்டர் வந்ததும் அதனை விற்றிருக்கின்றனர்” என்றார்.


கேரளாவில் இதற்கு முன்னதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் அலுவா பகுதியை சேர்ந்த ஒருவர் ஐஃபோன் 12 ஆர்டர் செய்தபோது அவருக்கு சோப் ஒன்று பார்சலில் வந்தது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஒரு பொருள் வாங்குவதற்கு பெரும்பாலானோர் இணையத்தின் மூலம் அமேசான் போன்ற நிறுவனங்களில் வாங்குகின்றனர். நேரில் சென்று வாங்கினால் நேரம் விரயமாகும் என்று எண்ணி இணையத்தில் வாங்குபவர்களுக்கு, நிறுவனங்களின் இத்தகைய நடைமுறை  அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற அலட்சிய நடைமுறை இனி தொடரக்கூடாது என்பதே வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


 


Puneeth Rajkumar | பயம் நல்லது.. புனீத் ராஜ்குமார் மரணத்தைத் தொடர்ந்து இவ்வளவு பெரிய மாற்றங்களா?