Crime : கேரளாவில் 19 வயது கல்லூரி மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஷ்ரத்தா கொலை வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், 16 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு காலை புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, இவரை பின்தொடர்ந்து சில நபர்கள் வந்துள்ளதாக தெரிகிறது.
இவரை பின்தொடர்ந்த அந்த மர்ம நபர்கள் 19 வயது மாணவியை கடத்தி வயநாடு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. மேலும், அந்த மாணவிக்கு நாள் முழுவதும் போதைப் பொருள் கொடுத்துள்ளனர். அதோடு இல்லாமல், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின்பு, அந்த சிறுமியை வயநாட்டில் இருந்து கோழிக்கோடு கொண்டு வந்து நடுரோட்டில் தூக்கி வீசியுள்ளதாக கூறப்படுகிறது.
மே 31ஆம் தேதி இரவு அந்த சிறுமி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதற்கிடையில் அவரது பெற்றோர்கள் மாணவி காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கோழிக்கோடு காட் ரோட்டில் சிறுமி கிடந்துள்ளது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியை மீட்டு தாமரசேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 19 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க