பெங்களூரில் உள்ள கெம்பேகெளடா (Kempegowda) விமான நிலையத்தில், கெம்பேகெளடாவுக்கு 108 அடி உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 4000 கிலோ எடையுள்ள வாள் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்தடைந்தது.


Nadaprabhu Hiriya Kempe Gowda என்ற பெயர் கொண்ட கெம்பே கெளவுடா என்பவர் விஜயநகர பேரரசர். இவர் பெங்களூர் நகரை உருவாக்கியவராக கருதப்படுகிறார். இவரின் 511-ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் பொருட்டு பெங்களூரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் கெம்பே கெளவுடாவுக்கு சிலை நிறுவ திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவரின் நினைவாகத்தான், கெம்பே கெளடா விமான நிலையம் என்று பெயரிடப்பட்டது.


இந்த சிலைக்கு 4000 கிலோ எடை கொண்ட வாள் டெல்லியில் இருந்து சிறப்பு டிரக்கில் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டது. 35 அடி நீளமுள்ள வாளை கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் சி.என். அஷ்வத் நாராயன் (Ashwath Narayan)விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், வாளுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கோள்ளப்பட்டன.


மேலும், அஷ்வத் நாராயன் கெம்பே கெளடா சிலை அமைப்படும் பணிகளை பார்வையிட்டார்.






கெம்பேகெளடா சிலை விமான நிலையத்தில் 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இந்த இடத்தில் கெம்பே கெளடாவின் புகழ் மற்றும் வரலாற்றை கூறும் வகையில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.85 கோடி மதிப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கெம்பேகெளடாவின் சிலை நொய்டாவைச் சேர்ந்த சிற்பி ராம் வாஞ்ஜி சுடார் என்பவர் வடிவமைக்கிறார், இவர் பதம் பூஷண் விருதாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலை மற்றும் பெங்களூரில் உள்ள விதான் சவுதா மகாத்மா காந்தி சிலை ஆகியவற்றை வடிவமைத்தவர் இவர்தான்.


கெம்பேகெளடா சிலை 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்னும் சிலை முழுமை பெறவில்லை.


 


Ramadan 2022: நோன்பும், நோன்பின் மாண்பும்.. சமத்துவத்தையும் ஈகையையும் போற்றும் பெருநாள்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண