பிரதமர் மோடி தற்போது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார். இந்த ஆண்டின் முதல் சுற்றுப்பயணத்தை நேற்று (மே 2 ) தொடங்கிய பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மெனி, டென்மார்க் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு சென்ற பிரதமர் மோடி , அந்நாட்டு அதிபர் Olaf Scholz சந்தித்து பேசினார். அதன் பிறகு இந்தியா - ஜெர்மெனி இடையேயான பசுமை மற்றும் நீடித்த எரிசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் நரேந்திர மோடியும், ஜெர்மெனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸும் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பிற்கு தலைநகர் பெர்லிங்கில் கிட்டத்தட 2,000 இந்தியர்கள் அடங்கிய கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மோடி , “ எனது நாட்டு குழந்தைகளை பெரிலிங்கில் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஜெர்மெனியின் பல்வேறு நகரங்களில் இருந்து நீங்கள் இந்த கூட்டத்திற்காக வந்துருப்பது மகிழ்ச்சி” என தனது உரையை தொடங்கிய மோடி .... ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் குறித்தும் பேசினார். அதில் “ ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது . எல்லோருக்குமே இது இழப்புதான். இந்தியா அமைதியையே விரும்புகிறது. உகரைனுக்கு இந்தியா உதவி வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக ஏழை , எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சா எண்ணை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது ” என்றார்.