கேதார்நாத் யாத்திரைக்கு தடை:


12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான, உத்தரகண்ட் மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வானிலை:


திங்கள் கிழமை, கனமழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு பெய்தது. இதனையொட்டி பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வானிலை சரியான நிலைக்கு மீண்டும் திரும்பிய பின்னர் தான் , யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திறக்கப்பட்ட நிலையில் தடை:


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பனிப்பொழிவு காரணமாக, கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கோயிலுக்குச் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.




 


மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை:


இந்நிலையில் யாத்திரைக்குச் சென்றவர்கள், அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கேதார்நாத் யாத்திரைக்கு தயாராகி வருபவர்கள், தொடக்க பகுதிகளிலேயே தடுக்கப்பட்டுள்ளனர். மேலும் யாத்திரைக்குச் சென்றவர்களுக்கு, யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு, மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


Also Read: இன்றும், நாளையும் லட்சத்தீவு, கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண