தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இன்றும், நாளையும் லட்சத்தீவு, கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்