வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், இலவசமாக விமான டிக்கெட் புக் செய்வதாக அறிவிக்கப்பட்டிருப்பது வாக்காளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்களவை தேர்தல்:


இந்தியாவில் மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 1 ஆம் தேதியுடன் 7 ஆம் கட்ட தேர்தலுடன் நிறைவடையும் மக்களவை தேர்தலுக்கு, ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு, வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க வருபவர்களுக்கு இலவசமாக விமான டிக்கெட் புக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் 14 தொகுதிகளுக்கு ஏற்கனவே ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதர 14 தொகுதிகளுக்கு வரும் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.




கர்நாடகா:


கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா தொகுதியில் இஸ்லாமிய வாக்காளர்களை, ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விமான டிக்கெட் புக் செய்து தருவதாக இஸ்லாமிய அமைப்பொன்று தெரிவித்துள்ளது. உத்தர கன்னடா பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பணி நிமித்தமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.  இந்நிலையில், அங்கு இருந்து வாக்களிக்க வரும் இஸ்லாமியர்களுக்கு இலவசமாக விமான டிக்கெட் புக் செய்து தருவதாக சவுதி அரேபியாவில் உள்ள பட்கல் இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அரபு நாடுகளில் இருக்கும்  வாக்காளர்களே வாக்களிக்க வாருங்கள். சொந்த ஊருக்கு வந்து வாக்களியுங்கள். மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.




image credits@ pixabay


இலவச விமான டிக்கெட்:


உத்தர கன்னடா தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், அரபு நாடுகளில் பணிபுரிந்து தருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இலவசமாக விமான டிக்கெட் அளிப்பதாக தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏனென்றால், கூகுள் தேடலில் பார்க்கும்போது கர்நாடகத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு விமான கட்டணமானது சுமார் 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை இருப்பதை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமிய அமைப்பு இது போன்ற ஆஃபரை அறிவித்திருப்பது வெளிநாடு வாக்காளர்கள் மத்தியில் சிந்தனையை தூண்டியுள்ளது என்றே கூறலாம். 


Also Read: Lok Sabha Election 2024: அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய நினைக்கிறது பாஜக.. சத்தீஸ்கரில் ராகுல் காந்தி ஆவேசம்