கர்நாடாகவில் முதல் முறையாக கழுதைப் பண்ணை ஒன்றினை தொடங்கியுள்ளார் ராம்நகராவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா கவுடா என்ற நபர் தொடங்கியுள்ளார்.


கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால்  பகுதியில், ராம்நகராவைச் சேர்ந்த சீனிவாச கவுடா  கடந்த ஜூன் 8-ஆம் தேதி கழுதைப்பண்ணை தொடங்கங்கினார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அவர் ஐ.டி துறையில் பணியாற்றி வந்தவராவார்.  


42 வயதான பட்டதாரி ஸ்ரீனிவாஸ் கவுடா என்பவர்தான்  இந்த கழுதைப்பண்ணையைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கவுடா கூறுகையில், "நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த 2020-ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி ஐரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையத்தை முதன்முதலில் தொடங்கினேன்.


பாக்கெட்டுகளில் கழுதைப்பால்


கழுதைப்பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். 30 மி.லி பாக்கெட் ரூ.150 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


கழுதைப்பால் அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்காக ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்துள்ளன" என்று தெரிவித்தார்.


கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பல பேர் பல்வேறு துறைகளிலிருந்து விலகி சுய தொழில் என்பதை தொடங்கியுள்ளனர். மும்பை, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள பலபேர் தான் வேலை செய்ததை விட்டுவிட்டு சுய தொழில் தொடங்கியுள்ளனர். இதில் அவர்கள் கூறுவது, சுய தொழில் என்பதால் மிகவும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடன் செய்ய முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும், தான் முதலாளி எனும் உணர்வு  கூடுதல் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறாது என்கின்றனர். அத்தோடு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நினைத்த நேரத்திற்கு வேலையினை தொடங்கலாம். பயனர்களின் நேரடியான கருத்துகள் தங்களை மேலும் முன்னேற்றவும், வலுப்படுத்தவும் உதவுவதாக தெரிவிக்கின்றனர். இப்போது கர்நாடகாவில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த கழுதைப் பண்ணையினால் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க மிகவும் நம்பிக்கையினை ஏற்படுத்தும் அளவிற்கு தன்னால் வெற்றி பெற முடியும் என ஸ்ரீனிவாசா கவுடா கூறுகிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண