மத்தியப்பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டைனோசர்களின் வசிப்பிடங்களாக இருந்த இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் டைனோசர் படிம தேசிய பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் டெல்லி பழ்கலைக்கழக ஆராய்ச்சிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் 10 டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், டைனோசர்களுடைய 52 கூடுகைள் கண்டுபிடித்தனர்.


நேச்சர் குரூப் என்ற இயற்கை சார்ந்த இதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுகைக்குள்ளும் 10 முட்டைகள் இருந்ததற்காக சுவடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக முட்டைக்குள் முட்டை இருக்கும் முறை பறவைகளில் தான் காணப்படும். ஊர்வனவற்றில் இதுவரை காணப்பட்டது இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


டைட்டானோசாரிட் டைனோசர் முட்டை:


தற்போது கண்டறியப்பட்டுள்ளது டைட்டானோசாரிட் வகை டைனோசர்களின் முட்டை என ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். இதன் மூலம் டைனோசர்களுகு பறவைகள், பள்ளி, ஆமைகள், முதலைகள் இதில் எந்த உயிரினத்தை ஒத்த இனப்பெருக்க முறையைக் கொண்டது என்பதை கண்டுபிடிக்க முடியும் என நம்புகின்றனர். பறவைகள் மட்டுமே இந்த முறையில் முட்டையிடும் என நம்பப்பட்டு வந்த நிலையில் ஊர்வனவான டைனோசர்களின் இரட்டை கரு முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இந்த ஆய்வு கட்டுரையை எழுதிய பேராசிரியரான டாக்டர் ஹர்ஷா திமான், ‘ டைடானோசரின் புதிய வகை கூடுகள் மற்றும் முட்டைகள் மூலம் டைனோசர்களுக்கு முதலை அல்லது பறவைகளின் தன்மை இருந்திருக்கலாம். அவற்றை போலவே இவற்றின் குணாதிசயம் இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும்’ என்று கூறியுள்ளார். 


இதன் மூலம் இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள டைனோசர் எச்சங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். டைனோசர் முட்டை மட்டுமல்லாது கூடுகள் குறித்து புதிய சுவாரஸ்யத் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் ஆனைவாரி ஓடை செல்லும் வழியில் உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதி மக்கள் வண்டல் மண் எடுத்தபோது கடல் வாழ் உயிரினங்கள் சிலவற்றின் படிமங்கள் பல்வேறு வடிவங்களில் அப்பகுதியில் காணப்பட்டன.


இதில் உருண்டை வடிவிலான கல் படிமம் டைனோசர் முட்டை எனத் தகவல் பரவியது. எனவே, இவற்றை பார்வையிட பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டனர். இந்த படிமங்களின் படங்களை பார்வையிட்ட புவியியல் ஆய்வாளர்கள் அது டைனோசர் முட்டை இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். 


ஆனால், தற்போது மத்தியப்பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஒரு புதிய மைல்கல் எனக் கருதப்படுகிறது.