கர்நாடகாவில் அமைந்துள்ளது உத்தர் கன்னடா மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வருபவர் நர்மதா. அவருக்கு வயது 50 ஆகிறது. அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளார். அவரது மகள் பெயர் திவ்யா. அவருக்கு வயது 25 ஆகிறது. மகன் பெயர் பாலச்சந்திர ஹெக்டே. அவருக்கு வயது 22 ஆகிறது.


கொரோனாவிற்கு பிறகு மன உளைச்சல்:


கொரோனா காலகட்டத்தின்போது பாலச்சந்திர ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பாலச்சந்திரா மீண்டாலும் அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இதையடுத்து, அவருக்கு அவரது தாயாரும், அவரது அக்காவும் சேர்ந்து மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.


பாலச்சந்திராவை நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால், அவரை பார்த்துக் கொள்வதற்காக தாய் நர்மதாவும், அக்கா திவ்யாவும் அடிக்கடி சென்று வந்துள்ளனர். தன்னால், தனது அக்காவும், அம்மாவும் அடிக்கடி நகரத்திற்கும், கிராமத்திற்கும் வந்து செல்வது பாலச்சந்திராவிற்கு மனதளவில் உளைச்சலை ஏற்படுத்தியது.


தற்கொலை


இதனால், அவர் தனது வீட்டில் இருந்தே சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை பாலச்சந்திரா வீட்டில் இருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவால் வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாத பாலச்சந்திரா துடித்துள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


பின்னர், வீட்டிற்கு வந்த தாய் நர்மதாவும், அக்கா திவ்யாவும் பாலச்சந்திரா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், யாரும் வீட்டின் உள்ளே அவர்கள் இருவரும் பாலச்சந்திரா ஹெக்டே இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே சமயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிர்சி காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Suicidal Trigger Warning









சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)