சமீப காலமாக, அதிகரித்துள்ள விபத்து சம்பவங்கள் அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. குறிப்பாக, கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்து சம்பவங்களை தவிர்க்கலாம். ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் குறைவான விழிப்புணர்வு அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது.


கோயில் திருவிழாவில் விபத்து:


அந்த மாதிரி சம்பவம்தான், கர்நாடக மாநிலம் கிண்ணிகோலியில் நடந்துள்ளது. அங்கு அமைந்துள்ள துர்கா பரமேஸ்வரி கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பொதுவாக, கோயில் திருவிழாக்கள் என்றால் பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பட்டாசுகளை வெடிப்பது அவசியம். 


5 குழந்தைகளுக்கு படுகாயம்:


இந்நிலையில், துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஐந்து குழந்தைகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல் நிலை குறித்து தற்போது தகவல் எதுவும் இல்லை.


கோயில் திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெடிக்கப்பட்ட பட்டாசுகளே பெரும் பிரச்னைக்கு வழி வகுத்துள்ளது.






அதில், மூன்று நான்கு பேர் சேர்ந்து வான வேடிக்கைகளை கொளுத்துவது பதிவாகியுள்ளது. ஆனால், மேலே சென்ற பட்டாசு வெடிப்பதற்குள் கீழே பட்டாசுகள் வெடித்து சிதறுகிறது. அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பட்டாசு வெடிப்பதால் அவர்கள் பதறி ஓடுகிறார்கள்.


இந்த கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டதா, அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.


தீ விபத்தின் வகைகள்:


தீ விபத்து என்று கேட்டாலே நம்மை அறியாமலே ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். சிலிண்டர் வெடிப்பு, பட்டாசு ஆலை விபத்து, தொழிற்சாலைகளில் மின் கசிவு என தீக்காயங்களின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


இந்த விபத்துக்கள் சில நேரங்களில் மிகுந்தப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. இதோடு காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து முதல், இரண்டாம், மூன்றாம் நிலை என வகைப்படுத்தப்படுகிறது.


முதல் நிலையில் ஓரளவிற்கு தப்பித்து விடலாம். ஆனால், மற்ற இரண்டு நிலை தீ விபத்துகளில் ஏற்படும் தீக்காயங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.


சில சமயங்களில் மரணத்திற்குகூட வழிவகுக்கும். குறிப்பாக ஒவ்வோரு ஆண்டும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1,80,000 மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.