கர்நாடகாவில் பிறந்த குழந்தையை நாய் கடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மகப்பேறு வார்டு அருகே பிறந்து குழந்தையின் உடலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று வாயில் கவ்விக் கொண்டு இழுத்துச் சென்றது.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நாயை பிடிக்க முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள நாயை துரத்தி சென்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு நாயிடமிருந்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மீட்டனர். அதனை தொடர்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஷிவமோகா மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜேஷ் சுரகிஷள்ளி கூறுகையில், ”இறந்த குழந்தை அரசு மருத்துவமனையில் பிறக்கவா அல்லது அனுமதிக்கப்படவே இல்லை. குழந்தையின் பெற்றோரின் அடையாளம் தெரியவில்லை. அவர்கள் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். மேலும், குழந்தையின் பெற்றோர் பற்றி தெரிந்து கொள்ள கர்ப்பிணிப் பெண்களின் பதிவேடுகளை அருகிலுள்ள அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் சோதனை செய்யத் தொடங்கி இருக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்பு, நாய் கடித்து குதறி கொன்றது ஒரு பெண் குழந்தை என்பதும், அந்த குழந்தை பிறந்து ஓரிரு நாட்களே இருக்கும் என்பது விசாரணையில் தெரிந்தது. மேலும், அந்த பச்சிளம் பெண் குழந்தையை, பெற்றவர்கள் மகப்பேறு வார்டுக்கு அருகில் வைத்துவிட்டு சென்றதும், இதனால் அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், குழந்தையின் பெற்றோர் விவரங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை நாய் கடித்து இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க