பில்கேட்ஸ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டிஜிசிஐ), மகாராஷ்டிரா அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய மூன்று பேருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு கொடுத்த நபர், தனது மகளின் மரணத்திற்கு கோவிஷீல்ட் தான் காரணம் என்று குற்றம் சாட்டி, இந்திய தடுப்பூசி தயாரிப்பாளரிடம் இருந்து 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.
நீதிமன்றம் நோட்டிஸ்
மனுதாரர் திலீப் லுன்வாட் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீது புகார் கூறுகிறார். அவருடன் அறக்கட்டளை SII, மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரையும் இணைத்திருக்கிறார். நீதிபதிகள் எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் மாதவ் ஜம்தார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆகஸ்ட் 26 அன்று மனுவில் அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
கோவிஷீல்டு தடுப்பூசி
இந்த வழக்கு நவம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது மனுவில், மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் லுனாவத், ஜனவரி 28 அன்று நாசிக்கில் உள்ள தனது கல்லூரியில் SII தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதாகவும், கட்டாயத்தின் பெயரால் தடுப்பூசயை போட்டுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.
கட்டாயத்தால் தடுப்பூசி
2021இல் அவர் ஒரு சுகாதார ஊழியராக இருந்த காரணத்தால் அதிகமான கொரோனா நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் முன்கள பணியாளர்களை கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. அதன்படி தடுப்பூசி எடுத்துக்கொண்ட அவருக்கு சில நாட்களுக்குப் பிறகு, கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசிதான் காரணம்
அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினேகல் மார்ச் 1, 2021 அன்று இறந்தார், மேலும் தடுப்பூசியின் பக்க விளைவுகளே அவரது இறப்புக்கு காரணம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2, 2021 அன்று மத்திய அரசின் பாதகமான நிகழ்வுகளைத் தொடர்ந்து நோய்த்தடுப்பு (AEFI) குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மனு, தனது மகளின் மரணம் கோவிஷீல்டின் பக்கவிளைவுகளால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. எஸ்ஐஐயிடம் இருந்து 1000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்