ஆசிய கோப்பை போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும், இலங்கையும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி இன்று ஷார்ஜாவில் தொடங்குகிறது.




இன்று தொடங்கும் முதல் போட்டியில் பி பிரிவில் முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தானும், பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இலங்கை அணியும் மோதுகின்றன. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறுகிறது.






இந்த போட்டித் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றிருந்தது. இதனால், இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பழிக்குப்பழி தீர்க்க இலங்கை அணி இன்று முழு மூச்சில் களமிறங்கும்.


கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பரூக்கி, முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் பந்துவீச்சில் அசத்தினர். சுழலிலும் ரஷீத்கானும், கேப்டன் முகமது நபியும் சுழலில் அசத்தினர். இதனால், இன்றைய போட்டியிலும் ஆப்கானிஸ்தான் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இலங்கை அணி கடந்த போட்டிகளில் கிடைத்த வெற்றியால் உற்சாகத்துடன் இந்த போட்டியில் களமிறங்கும், இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். பதும் நிசங்கா, அசலங்கா, குணதிலகா மற்றும் கேப்டன் சனகா பேட்டிங்கில் கட்டாயம் அசத்த வேண்டியது அவசியம்.




ஆப்கானிஸ்தான் அணியில் ஹசரத்துல்லா ஷசாய், குர்பாஸ் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இப்ராஹிம் ஜட்ரானும், நஜிபுல்லா ஜட்ரானும் இன்று அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  ரஷீத்தகான் நெருக்கடியான நேரத்தில் பேட்டிங்கில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


இலங்கையின் பதிரானா, பெர்னாண்டோ, ஹசரங்கா பந்துவீச்சில் கலக்குவார்கள் என்று நம்பலாம். சூப்பர் 4 சுற்றுப் பிரிவில் ஒவ்வொரு அணியும் தகுதி பெற்ற மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.