தலையை மறைக்கும் ஆடைகளுக்கு தடை.. அரசு தேர்வாணையம் சொல்வது என்ன?

தேர்வர்களுக்கு கர்நாடகா தேர்வு ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Continues below advertisement

கர்நாடகாவில்  தலையை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதித்து கர்நாடக தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

கர்நாடகாவில் அரசு தேர்வில்  சர்ச்சை:

தமிழ்நாடு, கர்நாடகா,  கேரளா என அனைத்து மாநிலங்களிலும் அரசு பணியிடங்களுக்கு தேர்வு மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படி அந்தந்த மாநில அரசு சார்பல்  நடைபெறும் தேர்வுகளில் அவ்வப்போது முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுவது வழக்கமான ஒன்று தான். இதனால், ஒவ்வொரு அரசு தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட, அதாவது நவம்பர் 6ஆம் தேதி  கர்நாடகாவில் அரசு தேர்வில்  சர்ச்சை ஏற்பட்டது. தேர்வு அறைக்குள் செல்லும்போது, அதில் பங்கேற்ற பெண் தேர்வாளர்கள் தாலியைக் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாங்கல்யம் தவிர, திருமணமான பெண்கள் கழுத்தில் இருந்த செயின், கம்மல், மெட்டி என அனைத்தையும் அகற்றுமாறு அதிகாரிகள் கூறினர்.  

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில், தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் அரசு தேர்வுகள் நடைபெற உள்ளன.

புதிய கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடகா தேர்வு ஆணையம்:

இதற்கு வரும் தேர்வர்களுக்கு கர்நாடகா தேர்வு ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, "தலையை மறைக்கும் அனைத்து வகையான உடைகளை அணிய அனுமதி இல்லை. அதாவது, தலை, வாய், காதுகளை மறைக்கும் எந்த வகையான ஆடைகளும் தேர்வு அறைக்குள் அணிந்து வரக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், ஹிஜாப் அணியக் கூடாது என்று குறிப்பிடவில்லை. மேலும், பெண்கள், ஷூக்கள் அணியவும், ஜீன்ஸ், டீ சர்ட் அணியவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆண்கள் டீ சர்ட் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, திருமணமான இந்து பெண்கள், மாங்கல்யம் காலில் அணியும் மெட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளளத.  மற்ற நகைகளான, செயில், கம்மல் போன்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரானிங் பொருட்களான செல்போன்கள், ப்ளூடூத் சாதனங்கள் எடுத்த செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்கவும், ப்ளூடூத் போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்ளது.   


                                                                     

இதையும் படிக்க: "சாதியை வைத்து அரசியல் செய்யமாட்டேன்; ஆனால் என் சாதிய மறைக்க விரும்பல" - மனம் திறந்த சரத் பவார்

Continues below advertisement
Sponsored Links by Taboola