கர்நாடகா மாநிலம், பைந்தூர் அருகே உள்ள சுங்கச்சாவடி நோக்கி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் ஹொன்னாவாரா பகுதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ஏற்றிச் சென்ற இந்த ஆம்புலன்ஸ் வாகனம், பைந்தூர் சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
சுங்கச்சாவடியை நோக்கி வேகமாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து கவிழும் காட்சிகள் முன்னதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மழை பெய்து ஈரமாக இருந்த சாலையில் வாகனம் வேகமாக வருவதும், ஆம்புலன்ஸ் வருவதைக் கண்டு சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் வேகவேகமாக அவ்வழியில் உள்ள வேகத்தடைகளை விலக்குவதும் அதையும் மீறி ஆம்புலன்ஸ் கவிழ்வதும் அங்கிருக்கும் சிசி டிவியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் சுங்கச்சாவடியில் பணிபுரிந்த நபர், ஆம்புலன்சில் பயணித்த மூவர் என நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்