கர்நாடகாவில் கடையில் பெயிண்ட் வாங்க சென்றவர் திடீரென நெஞ்சு வலி ஏற்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

அதிகரிக்கும் மாரடைப்பு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் முதல் பெரியவர் வரை அனைவரும் மாரடைப்பால் இறப்பது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்க்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகாவை சேர்ந்த ஹல்கூர் பகுதியில் 58 வயதுடைய நபர் ஒருவர் பெயிண்ட் கடைக்கு பெயிண்ட் வாங்க சென்றிருக்கிறார். 

Continues below advertisement

திடீர் மாரடைப்பு: 

அந்த நபர் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட கடையின் உரிமையாளர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில்  அவர் அங்குள்ள ஹுல்லாகல கிராமத்தைச் சேர்ந்த இரணையா என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பெயிண்ட் வாங்க வந்தவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பும் கவனமும்:

இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்பி வருகின்றனர். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிகிச்சையளிக்கப்படாத மருத்துவ நிலைமைகள் ஆகியவை இதய சிக்கல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகின்றன. மாரடைப்பு பெரும்பாலும் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் தாக்குகிறது.

திடீர் மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், வியர்வை அல்லது கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. முதல் சில நிமிடங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை ஒரு உயிரைக் காப்பாற்றும். அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் குடிமக்களை இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், வழக்கமான பரிசோதனைகளுக்குச் செல்லவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், CPR போன்ற அடிப்படை உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வலியுறுத்துகின்றனர், இதனால் அவசர காலங்களில் சரியான நேரத்தில் உதவி வழங்க முடியும்.