கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹாவன்ஜே என்ற பகுதியில் உள்ள தனது நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு 23 வயதான ஜோஸ்னா லூவிஸ் என்ற இளம்பெண் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென அந்த இளம்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குந்தபுராவின் பஸ்ரூரில் வசிக்கும் 23 வயதான ஜோஸ்னா கோத்தா, நவம்பர் 23 புதன்கிழமை மாலை ஹவாஞ்சேவில் உள்ள நெருங்கிய தோழியின் ரோஸ் விழாவில் (கத்தோலிக்கர்களால் நடைமுறைப்படுத்தப்படும் திருமணத்திற்கு முந்தைய சடங்கு) கலந்துகொண்டார். வரிசையாக மணப்பெண்ணை அழைத்து வரும் அந்த நிகழ்ச்சியில் சந்தோஷமாக ஆடிப்பாடி நடந்து கொண்டிருந்த ஜோஸ்னா, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடைக்கு முன்பு மயங்கி கீழே விழுந்தார். 




உடனடியாக திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர், ஜோஸ்னாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோஸ்னா ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். 



thanks : mangalorean news 


இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான குந்தாபுராவிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. 


காவல்துறையினர் ஜோஸ்னாவின் குடும்பத்தினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ஜோஸ்னா இறப்பதற்கு முன்பு மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், அவருக்கு உடலில் எந்தவித நோயும் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த உயிரிழப்பு தொடர்பால பிரம்மாவர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.