குஜராத்தில் கலவரம் செய்தவர்களுக்கு 2002-ல் பாஜக தக்க பாடம் கற்பிக்கப்பட்டது, இதுவரை அவர்கள் தலை நிமிரத் துணியவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது கட்சிக்காக பிரச்சாரத்தில் கூறினார், பா.ஜ.க “நிரந்தர அமைதியைக் கொண்டுவந்தது” என்றார். ”
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் நிறைந்த ரயில் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளில் பெரும் வன்முறை ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகிறது.
மாநிலத்தில் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 4.90 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
நிரந்தர அமைதி:
மாநிலத்தில் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 24 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் தொடரும் பா.ஜ.க. கட்சிக்கு இம்முறை சவால் மிகுந்த தேர்தலாக இருக்கும்.
“காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது குஜராத்தில் வகுப்புவாத கலவரம் அதிகமாக இருந்தது. இது நடந்ததா இல்லையா என்பதை சத்தமாக சொல்லுங்கள்? 2002ல் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சியால் தற்போது வரை மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது” என்று அமித்ஷா கூறினார். கலவரத்தைத் தூண்டுவதை காங்கிரஸ் ஒரு வழக்கமாகக் வைத்திருந்ததாகவும் அதனால்தான் கலவரம் நடந்தது எனவும் குஜராத்தில் உள்ள பாஜக அரசு, கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்டியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
மும்முனை போட்டி:
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் மத்திய அமைச்சரின் இந்த வாதத்தை கடுமையாக விமர்சித்தார். அதில் அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களும் அவரது சிறிய கையை இனிமையாக்காது, ”என்று அவர் எழுதியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சி கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஜேபி-யின் அரசியல் எதிரிகளான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸும் - 2024 பொதுத் தேர்தலுக்கு, தேர்தல் ரீதியாக முக்கியமான மாநிலங்களில் தங்கள் ஆட்சியை நிறுவ, பா.ஜ.க கட்சியை தோல்வியடைய செய்து தங்கள் அரசாங்கத்தை நிறுவ பார்க்கின்றனர்.