மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கணேடிவாலாவின் பதவிகாலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 12 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பதவி நீட்டிப்பு அல்லது உறுதிப்படுத்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் இதுவரை எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை.
மேலும்,கூடுதல் நீதிபதியாக இருக்கும் நீதிபதி அபய் அஹுஜாவின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி அஹுஜாவின் பதவிக்காலம் மார்ச் 2022 இல் முடிவடைகிறது. பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டவுடன், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 52 நிரந்தர நீதிபதிகளும் 8 கூடுதல் நீதிபதிகளும் இருப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தது.
எனவே, பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பாக, நீதிபதி புஷ்பா கணேடிவாலா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருந்தவர் புஷ்பா கணேடிவாலா. இவர் கடந்த 2007இல் மாவட்ட நீதிபதியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி கணேடிவாலா அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல், அதே மாதத்தில் அவர் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த, ஜனவரி 19, 2021 அன்று வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை தீண்டி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேடிவாலா, சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது எனவும், தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே அது பாலியல் அத்துமீறல் என்று தெரிவித்தார்.
அதேபோல், சிறுமியின் கையைப் பிடிப்பதும்,பேன்ட் 'ஜிப்' திறந்திருப்பதும் பாலியல் அத்துமீறலாகாது என சர்ச்சைக்குரிய கருத்தையும் இவர் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க: ''போர் அடிக்குதுனு ரெண்டு புள்ளி வச்சேன்.. 7.47 கோடி ஓவியத்தை நாசம் செய்த செக்யூரிட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்