கடந்த 1999-ம் ஆண்டு, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது மாடல் அழகி ஜெசிகா லாலின் கொலை வழக்கு. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வினோத் ஷர்மாவின் மனு ஷர்மா கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது.
இந்நிலையில், ஜெசிகா லாலின் தங்கை சப்ரினா லால் உடல் நல பாதிப்பு காரணமாக ஆகஸ்டு 15-ம் தேதி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 53. கடந்த சில ஆண்டுகளாகவே, அவருக்கு கல்லீரலில் பாதிப்பு இருந்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த தலிபான்கள்? உருவானது எப்படி?
ஜெசிகா லால் கொலை செய்யப்பட்டது முதல், தனது சகோதரியின் கொலை வழக்கிற்காக பல ஆண்டுகள் போராடியவர் சப்ரினா லால். அவரது போராட்டத்திற்கு கிடைத்த பலனாக, இந்த வழக்கில் தொடர்புடைய மனு ஷர்மாவுக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
”சப்ரினாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள் மற்றும் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வந்தாள். இந்நிலையில் நேற்று, அவள் உடல்நிலை மோசமடைந்ததால், நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், மாலை, அவள் இறந்துவிட்டாள்" என அவரது சகோதரர் ரஞ்சித் லால் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சப்ரினா, தனது சகோதரி ஜெசிகாவின் நினைவாக பெண்களுக்கு ஏற்படும் அநியாயங்களை தட்டி கேட்கும் வகையிலும், பெண்கள் தொடர்பான வழக்கில் நீதி கிடைக்கவும் ஒரு அமைப்பை நிறுவ இருப்பதாக தெரிவித்திருந்தார். ஜெசிகா லாலின் கொலை வழக்கை தழுவி எடுக்கப்பட்ட ‘ நோ ஒன் கில்ட் ஜெசிகா’ என்ற பாலிவுட் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை நிறைவு செய்த மனு சர்மாவை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யும்படி தண்டனை மறுஆய்வு வாரியம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று, மனு சர்மாவை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மனுசர்மா சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
''தலிபான் எங்கள கொன்னுடுவாங்க.. இனி சுதந்திரமே இருக்காது'' ஆஃப்கான் விவகாரத்தில் கலங்கிய பெண்!