கிருஷ்ண ஜெயந்தி கடந்த 19-ஆம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வட இந்திய மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெறும்.
சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கயிற்றில் கட்டி அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள பானையை உறியடிக்கின்றனர்.
இதற்காக ஒவ்வொரு பெண்ணின் மீதும் ஒவ்வொரு பெண்களாக ஏறி நின்று உறியடித்தனர். இதில், இளம்பெண்கள் மீது நடுத்தர வயது பெண்கள் ஏறி நிற்க அவர்கள் மீது வயதான பாட்டி ஒருவர் துணிச்சலுடன் ஏறி அந்தரத்தில் தொங்கியிருந்த பானையின் கயிற்றை இறுக பற்றினார். பின்னர், அவர் தனது கையால் பானையை அடித்து உடைத்து அசத்தினார். பெண்களாக ஒன்று சேர்ந்து கிருஷ்ண ஜெயந்திக்கு உறியடித்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரியங்கா சதுர்வேதி வயது என்பது ஒரு எண் மட்டுமே என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தன்னுடைய டுவிட்டரில் விக்டோரியா மெமோரியன் பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் பார்வையற்ற சிறுவன் பானையை உடைத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த இரு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Video: மெட்ரோ ட்ராக்கில் ஆபத்தை அறியாமல் நடந்து சென்ற நபர்.. பதறவைத்த காட்சிகள்.. என்ன நடந்தது?
மேலும் படிக்க : Watch Video: அமித்ஷாவுக்கு செருப்பை எடுத்து கொடுத்த பாஜக தலைவர்.. எழும் கேள்விகளும், விமர்சனங்களும்..