பிசியான டெல்லி மெட்ரோ பாதையில் நபர் ஒருவர் மிக அலட்சியமாக நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.


எப்போதும் படு பிசியாக இருக்கும் மெட்ரோ நகரங்களில் மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் துரிதப்படுத்தவும் இயங்குபவை மெட்ரோ ரயில்கள்.


நகரத்தில் மக்கள் அலுவல்விஷயமாகச் செல்லும் பிசியான பொழுதுகளில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், பிற நேரங்களில் பத்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயங்கி வருகின்றன.


இத்தகைய பிசியான மெட்ரோ ரயில்கள் வந்து செல்லும் ட்ராக்கில் மேற்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் மிக அலட்சியமாகவும் சாவகாசமாகவும் நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.


இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவரால் பகிரப்பட்டுள்ள இந்தக் காட்சியில் மெட்ரோ ட்ராக்கின் கீழே இருக்கும் ரோட்டில் இருந்து மக்கள் திரண்டு கத்தும் நிலையில், இவை எதையும் கவனிக்காமல் மேலே மெட்ரோ ட்ராக்கில் நடந்து செல்கிறார்.






டெல்லி மெட்ரோ லைனில் அமைந்துள்ள நங்கோலி ஸ்டேஷன் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், இது குறித்து வேடிக்கையான கமெண்டுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.






இதேபோல் முன்னதாக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள பிசியான மும்பை -  அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாதசாரிகள் நெடுஞ்சாலையைக் கடக்க உதவும் மேம்பாலத்தில் ஏறி ஆட்டோ ஓட்டும் வீடியோ வெளியாகி இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




மேலும் படிக்க: துன்புறுத்தப்பட்ட பழங்குடியின சிறப்பு குழந்தை இப்போ எப்படி தெரியுமா? ஆதரவு தெரிவித்த பிரபல நட்சத்திரங்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண