ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஹனீஸ் எனலத்தீப் லோன் மற்றும் அனந்த்நாக்கைச் சேர்ந்த உமர் நசீர் என்று தெரியவந்துள்ளது.  மற்றொருவரை அடையாளம் காணும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.






இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை தரப்பில் கூறுகையில், "சோபியான் மாவட்டம், முன்ச் மார்க் பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.  அங்கு, அலஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.


பின்னர் கூறியதாவது, " சோபியான் மாவட்டத்தில் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து, பாதுகாப்பு படையினர் காஷ்மிர் போலீசாருடன் இணைந்து இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோபியான் மாவட்டம் முன்ச் மார்ச் என்ற பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலை அடுத்து பாதுகாப்புப்படையில் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், அலஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்றார். இன்னும் ஒரு சிலர் பதுங்கியிருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். இந்த தேடுதல் தொடரப்படும் என்றும் தெரிவித்தனர்.




மேலும் படிக்க


Manipur: மணிப்பூர்: அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடிய போது ஏற்பட்ட துயரம்.. சுட்டுக் கொல்லப்பட்ட பெண்..


Sundar Pichai: பிரதமர் மோடியையும், குடியரசுத் தலைவர் முர்முவையும் சந்தித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.. என்ன பேசினார்?


என்னது மெஸ்ஸி அசாமில் பிறந்தவரா..? காங்கிரஸ் எம்பி கொடுத்த ஷாக்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!