தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்த ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற புதிய திட்டம் தொடக்கம் - உலகத்தமிழர்கள், தொழில் அதிபர்கள் புதிய திட்டத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு முதல்வர் வேண்டுகோள்

  • பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை - விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு 

  • பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 13 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி - பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் 

  • 2022-23ஆம் கல்வி ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி தொடக்கம் 

  • சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்கும் இயக்கமாக அதிமுக எப்போதும் இருக்கும் - இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 

  • 3 முறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி விட்டு வருவாய் உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் பாராட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு 

  • உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்பாக  இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது


இந்தியா:



  • டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு - பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட் -அப் நிறுவனங்களில் ரூ.600 கோடி முதலீடு செய்யப்படும் என அறிவிப்பு 

  • எல்லையில் சீன ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் அனுமதிக்காது - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதில் 

  •  எல்லையில் ட்ரோன்கள், போர் விமானங்களை அதிகளவில் நிலை நிறுத்தும் சீனா - செயற்கைகோள் மூலமாக சீனாவின் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தது

  • சபரிமலையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் - பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனம் செய்யும் முன்பதிவு முறை ரத்து 


உலகம்:



  • இலங்கையில் பொருளாதார நெருக்கடி - பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐ.நா. சார்பில் ரூ.11 கோடி நிதியுதவி 

  • கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி - குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

  • ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் - கருத்துக்கணிப்பில் இணையவாசிகள் வலியுறுத்தல் 

  • பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம்  காரணமாக பஸ்கள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி - 23 பேர் காயம்


சினிமா: 



  • விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இருந்து 3வது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு 

  • தெலுங்கு படமான உப்பென்னா ரீமேக் வழக்கு - நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து 

  • இடைவேளை இல்லாமல் வெளியாகும் நயன்தாராவின் கனெக்ட் படம் - தியேட்டர் அதிபர்கள் ரத்து 


விளையாட்டு:



  • கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மும்பையில் இன்று மோதல் 

  • இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டி : சென்னை எஃப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் இடையேயான ஆட்டம் டிரா 

  • சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா ஓய்வு 

  • சர்வதேச கால்பந்து போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி அறிவிப்பு