Terrorists Encounter: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. குட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்கள் என்று தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் குட்காம் பகுதிக்கு சென்றனர். அங்கு குஜ்ஜார் பகுதியில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனை அடுத்து, அதே பகுதியில் மேலும் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறை கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. மேலும், அப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி வருகிறோம்" என்றனர். பிர் பஞ்சால் பள்ளத்தாக்கின் எல்லை மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் கேகர்நாக் அருகே காடோல் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதனை அடுத்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
AAP MP Arrest: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது.. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ED அதிரடி
Chepauk Stadium: சென்னையில் முதல் போட்டியில் ஆடும் இந்தியா.. சேப்பாக்கம் மைதானத்தை பாக்கலாம் வாங்க!