உஜ்வாலா திட்ட சமையல் கேஸ்  சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 


உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சலுகை:






வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம்  மூலம் சுமார் 9.6 கோடி குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டரின் விலை சந்தை விலையை விட 200 ரூபாய் குறைக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இனி, 300 ரூபாய் மானியமாக குறைக்கப்பட்டு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படும்.


உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அமைச்சரம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 14 கிலோ எடையுடைய வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.


 சிலிண்டர் விலை என்ன?


வீட்டு உயபோக சிலிண்டர் விலை ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாயை குறைத்த நிலையில், ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வீட்டு உபயோக சிலிணடர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


ஆனால், இந்த மாதம்  19 கிலோ எடை கொண்ட வணிக  எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி வணிக ரீதியான சிலிண்டர்களின் விலையை 158 ரூபாய் குறைத்த நிலையில், இந்த மாதம் அதிரயாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்து 899க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   




மேலும் படிக்க


Nobel Prize in Chemistry: வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு


High Court: முதலமைச்சர், அமைச்சரை அவதூறாக பேசிய விவகாரம்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு அதிரடி நிபந்தனை