ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவின் நேரத்தை விலக்குவது தொடர்பான உத்தரவை ஹரியானா அரசு வெளியிட்டது. மாவட்ட மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில், 14.08.2023 மற்றும் 15.08.2023 ஆகிய தேதிகளில் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை (14.00 மணி நேரம் மட்டும்) பொதுமக்களின் நடமாட்டத்திற்கான ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக, திரேந்திர கத்கதா, ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
ஹரியானா வன்முறை:
ஹரியானாவின் முக்கிய நகரமான குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணி கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருக்கும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. வன்முறையில் இருந்து தற்காத்து கொள்ள 2,500 பேர் கோயிலுக்கு சென்று, தஞ்சம் அடையும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது. மேலும் மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் என்ற ஒருவர் உயிரிழந்தார்.
சுதந்திர தினம்:
இந்நிலையில், நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் சுமார் 14 மணி நேரம் வரை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதாக நேற்றைய தினம் ஹரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதை காவல்துறை கண்காணிப்பாளர் நூஹ் உறுதி செய்ய வேண்டும் என்றும், அவசர மருத்துவ உதவியைப் பெறுவதற்காக அனுமதிக்கப்படுவது அவசியம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு நிலைமை மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் இன்னும் சிக்கலான மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் இருப்பதாகவும் துணை ஆணையர் நூஹ் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக திரேந்திர கத்கதா தெரிவித்துள்ளார்.
வெறுப்பு பேச்சுகள்:
இந்த கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஹரியானா மதக்கலவரத்திற்கு காரணமாகக் கூறப்படும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில், "பேரணிகளின் போது வெறுப்பூட்டும் பேச்சுகளோ வன்முறைகளோ நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு" மாநில அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Shocking : 24 மணிநேரம்.. 18 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?