நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான மாணிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மாநிலங்களவையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 


 


இந்நிலையில்  கடந்த 24ஆம் தேதி மாநிலங்களவையில் பாஜகவைச் சேர்ந்த நியமன எம்பி சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் மாநிலங்களவையில் சிறப்பு விவகாரங்கள் தாக்கல் செய்யும் நேரத்தில் பேசினார். அப்போது அவரைப் பார்த்த மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு சுரேஷ் கோபி ஒரு பதிலை தந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






அதில், வெங்கய்யா நாயுடு, “நீங்கள் முககவசம் அணிந்து இருக்கிறீர்களா அல்லது இது தாடியா” என்று கேட்டுள்ளார். அதற்கு எம்பி சுரேஷ் கோபி, “இது என்னுடைய புதிய படத்திற்கான புதிய லுக்” என்று கூறினார். மாநிலங்களவையில் வெங்கய்யா நாயுடு கேட்ட இந்த கேள்வி பெரும் சிரிப்பு அலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. 


நாடாளுமன்றத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எப்போதும் தன்னுடைய பேச்சுகளின் மூலம் சிரிப்பு மற்றும் கவனத்தை ஈர்ப்பார். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்ட தொடர் வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.




மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண