பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. 


 






இந்நிலையில் யார் இந்த அல்லூரி சீதா ராமராஜூ? 


 


1900களில் ஆந்திரா பகுதியில் பழங்குடியினருக்கு ஆங்கிலேயே அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக 1882ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மெட்ராஸ் வனத்துறை சட்டம் பழங்குடியினருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதாவது பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரிய வேளாண் முறையை செயல்படுத்த பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது. இதன்காரணமாக அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து 1922ஆம் ஆண்டு அல்லூரி சீதா ராமராஜூ ரம்பா போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் அல்லூரி சீதா ராமராஜூ தலைமையில் ஆயுதம் ஏந்தி பலரும் போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் அப்போது ஆங்கிலேயே அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது. 1924ஆம் ஆண்டு அல்லூரி சீதாராம ராஜூவை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. அப்போது அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து காவலர்கள் அவரை சுட்டுக் கொலை செய்தனர். இவருடைய சிறப்பை பாராட்டி இவருக்கு மனையம் வீரடு அதாவது காடுகளின் ஹீரோ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் இவர் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண