IRCTC இணையதளம் முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் என IRCTC நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையை விரைந்து சரி செய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளதாக IRCTC நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் ரத்து மற்றும் பயணத்தை தவற விட்டவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் , தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை அமேசான், மேக் மை டிரிப், உள்ளிட்ட மாற்று இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி  இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.  இந்த இணையதளம் மூலம் பயணிகள் எளிதில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். மடிக்கணினிகள் வாயிலாகவும், செல்போன் ஆப்கள் மூலமாகவும் இந்த இணையதளத்தில் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துகொள்ளலாம். இந்த வசதி ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கிறது. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. தற்போது IRCTC இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். 


மேலும் படிக்க, 


Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!


https://tamil.abplive.com/news/tamil-nadu/milk-products-priced-at-rs-20-to-rs-100-has-been-ordered-by-administration-of-aavin-130998/amp