பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசு தனது 85 வது பிறந்தநாளை இன்று  கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாசு அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.






அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பா.ம.க நிறுவனர் நேற்றைய தினம் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த மடலில், “எனது பொதுவாழ்வுப் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை, சுற்றுச்சூழல்  சார்ந்து என்னென்ன இலக்குகளையெல்லாம் நான் வரித்துக் கொண்டேனோ, அந்த இலக்குகளை  எனது 44 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இன்னும் முழுமையாக என்னால் அடைய முடியவில்லை.


* சமூகத்தில், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான அளவு இடப் பங்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும்.


* அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் 100% இடப் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.


* தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் அன்னை தமிழுக்கு அரியணை அளிக்கப்பட வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.


* தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.


* ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தபட வேண்டும்.


* ஒரு புகையிலை கூட இருக்கக்கூடாது. அனைத்து வகை புகையிலைப் பழக்கங்களில் இருந்தும் மக்கள் மீட்கப்பட வேண்டும்.


* கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


* இவை அனைத்தையும் நினைத்த நேரத்தில் சாத்தியமாக்குவதற்காக தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பன தான் எனது இலக்குகளில் முதன்மையானவை” என குறிப்பிட்டுள்ளார்.  


Flood Warning: பவானி கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வேகமாக நிரம்பும் பில்லூர் அணை


Senthil Balaji Case: எத்தனை நாட்கள் காவல்? நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி.. செக் வைக்குமா நீதிமன்றம்?